
'X ப்ரீமியம்' சந்தாதாரர் எண்ணிக்கையைப் பெருக்க எலான் மஸ்க்கின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
X தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க பல்வேறு திட்டங்களையும், மாற்றங்களையும் முன்னெடுத்து வருகிறார் எலான் மஸ்க்.
அதன் ஒரு பகுதியாக, அத்தளத்தின் கட்டண சேவையான 'X ப்ரீமியம்' சேவையின் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிக்க விளம்பர வருவாய்ப் பகிர்வுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்.
இத்திட்டத்தின் கீழ், X ப்ரீமியம் சேவைக்குக் கட்டணம் செலுத்திய பயனாளர்களின், பதிவுகளின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டது X.
அதன் படி கடந்த இரு மாதங்களாக, உலகளாவிய X பயனர்களுடன் தங்களுடைய விளம்பர வருவாயைப் பகிர்ந்தும் கொண்டு வருகிறது அத்தளம்.
ட்விட்டர்
'X ப்ரீமியம்' சேவைப் பயனாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி:
இந்த விளம்பர வருவாய்ப் பகிர்வுக்கு குறிப்பிட்ட அளவுகோள்களை விதித்திருந்தது X தளம். அதன்படி, கடந்த மூன்று மாதங்களில், தங்கள் X பதிவுகளில் குறைந்தபட்சம் 15 லட்சம் பார்வைகளைப் பெற்ற, 500-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டவர்களுடன் விளம்பர வருவாய் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அளவுகோள்களைக் குறைத்து மாற்றம் செய்திருக்கிறார் எலான் மஸ்க். அதன்படி, கடந்த மூன்று மாதங்களில், X பதிவுகளில் ஒட்டு மொத்தமாக 5 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தாலே, விளம்பர வருவாய்ப் பகிர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் குறைந்தபட்சமாக 50 டாலர்களைப் பெற்றவர்களுக்கு மட்டுமே விளம்பர வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் தொகையைச் செலுத்தி வந்த X தளம், தற்போது அதனை 10 டாலர்களாகக் குறைத்திருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு:
This essentially means that X Premium (fka Twitter Blue) is free for accounts that generate above 5M views.
— Elon Musk (@elonmusk) August 11, 2023
Note, only views from verified handles count, as scammers will otherwise use bots to spam views to infinity. https://t.co/87MqqyUu2E