எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்த மார்க் ஸூக்கர்பெர்க்.. என்ன நடக்கிறது இருவருக்குமிடையே?
செய்தி முன்னோட்டம்
X (ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா சிஇஓ மார்க ஸூக்கர்பெர்க் கூண்டுச் சண்டையில் விரைவில் மோதிக் கொள்ளவிருக்கின்றனர், அல்லது அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
'தாங்கள் இருவரும் சண்டையிடும் நிகழ்வானது X தளத்தில் நேரலை செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் நிதியானது தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும்' எனத் தன்னுடைய X தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டார்.
எலான் மஸ்க்குடைய பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை மெட்டாவின் புதிய த்ரெட்ஸ் தளத்தில் பகிர்ந்து, "உண்மையிலேயே நிதி திரட்ட வேண்டுமானால், வேறு நம்பகமான தளத்தில் அல்லவா நேரலை செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்.
இதன் மூலம், அவர்கள் இருவருக்குமான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்:
கடந்த ஜூன் மாதம், ஜிய-ஜிட்ஸூ என்ற தற்காப்புக் கலையில் நீல பெல்ட் ஒன்றைப் பெற்று அசத்தினார் மெட்டா சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க். இது குறித்து இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார் அவர்.
எலான் மஸ்க்கின் X-க்குப் போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை அப்போது மெட்டா உருவாக்கி வந்ததையடுத்து, இருவருக்கும் இடையே அவ்வப்போது வார்த்தைப் போர் நடைபெற்று வந்தது.
அப்போது, பயனர் ஒருவருக்கு அளித்த மறுமொழியின் போது, "அவர் (ஸூக்கர்பெர்க்) சண்டையிடத் தயாராக இருந்தால், நானும் தயாராகவே இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார் எலான் மஸ்க்.
அதற்கு மார்க் ஸூக்கர்பெர்க்கோ, சண்டைக்கான இடத்தைக் குறிப்பிடும்படிக் கூறி மறுமொழி செய்ய, எலான் மஸ்க் மற்றும் ஸூக்கர்பெர்க் இடையிலான வார்த்தைப் போர் சூடுபிடிக்கத் தொடங்கி தற்போது இந்த நிலையை அடைந்திருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்கின் பதிவு:
Zuck v Musk fight will be live-streamed on 𝕏.
— Elon Musk (@elonmusk) August 6, 2023
All proceeds will go to charity for veterans.