விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல்

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு மற்றும் தனிப்பட்ட இலக்குகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சனிக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற்ற 2024 டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகல்? இந்திய வீரர் டி நடராஜன் வெளியிட்ட முக்கிய தகவல்

2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியில் முக்கிய வீரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் டி நடராஜன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

13 Sep 2024

ஐபிஎல்

ஐபிஎல் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதில் தாமதம்; பிசிசிஐயின் திட்டம் என்ன?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தக்கவைப்பு விதிகளை வெளியிடுவதை ஒத்திவைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை

பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா!

கிரேட்டர் நொய்டாவில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 13) வரை ஆப்கான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

ஜாம்பவான் தயான் சந்தின் சாதனையை சமன் செய்தார் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்

வியாழக்கிழமை (செப்டம்பர் 12) சீனாவின் ஹுலுன்பியரில் உள்ள மோகி ஹாக்கி பயிற்சித் தளத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஹாக்கிப் போட்டியின் நான்காவது குரூப் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்த ரோஹித் ஷர்மா; யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலியும் முன்னேற்றம்

மார்ச் 2024இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.

ஒரே ஓவரில் மூன்று 4'ஸ், 6'ஸ்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட்

செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20I போட்டியில் தனது அதிரடி ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்.

'ஆறுதல் கூறாமல், போட்டோ மட்டும் எடுத்து சென்றார்': PT உஷா மீது வினேஷ் போகட் பகீர் குற்றசாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷா தனது அனுமதியின்றி மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடன் புகைப்படம் எடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.

சஞ்சு சாம்சன் கேரளா சூப்பர் லீக்கின் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானார்

இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுமான சஞ்சு சாம்சன், கேரளா சூப்பர் லீக் (KSL) கிளப் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானதன் மூலம் தனது தொழில்முறை போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளார்.

ஒரே வருடத்தில் டென்னிஸ் பட்டங்களை வென்ற இளம் வீரர்கள்

இரு தினங்களுக்கு முன்னர் இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி 2024 யுஎஸ் ஓபன் தொடரை வென்றார்.

இங்கிலாந்து-இலங்கை போட்டிக்கு பின் உலக டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்; இந்தியாவின் நிலை என்ன?

பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் ஓவல் மைதானத்தில் 219 ரன்களை துரத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்

இந்தியாவும், பங்களாதேஷும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சை, குழுவின் தொடர் ஆதரவு..US Open போட்டியில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர்

US Open டென்னிஸ் போட்டி தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்றுள்ளார்.

எம்எஸ் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர்

துலீப் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) புகழ்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வியக்கத்தக்க சாதனையை சமன் செய்தார்.

சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது.

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு; காரணம் என்ன?

பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் எப்41 இல் இந்தியாவின் நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கம் வென்ற ஈரானின் சதக் பெய்ட் சையத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தங்கமாக உயர்த்தப்பட்டது.

செப்டம்பர் 11 முதல் சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; 55 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரரான ஷாருக்கான் உள்ளிட்ட 55 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் தெற்காசிய தடகள சம்மேளனத்தின் ஜூனியர் போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வருகிறது பாரிஸ் பாராலிம்பிக்ஸ்; இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கும் ஹர்விந்தர் சிங், ப்ரீத்தி பால்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமையேற்ற உள்ளனர்.

ஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கான ஆப்கான் அணி அறிவிப்பு

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரவீன் குமார்

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தூரம் கடந்து தொடர்ந்து இரண்டாவது பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம்

ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.

ரூ.230 கோடி நிகர லாபம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வருமானம் 340% அதிகரிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டில் நிகர லாபம் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பாராலிம்பிக்ஸ் பதக்க மங்கைகளை நேரில் சந்தித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பாராலிம்பிக்ஸ் ஜூடோ: கபில் பர்மருக்கு வெண்கலம் பதக்கம்; இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஐ எட்டியது

பார்வையற்ற ஜூடோ விளையாட்டு வீரரான கபில் பர்மர், ஆடவருக்கான 60 கிலோ (ஜே1) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஜூடோவில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கம் என்ற வரலாறு படைத்தார்.

தீவிர உடற்பயிற்சியில் ரோஹித் ஷர்மா; வைரலாகும் புகைப்படங்கள்

ஜூன் மாதம் நடந்த டி20 உலகக்கோப்பை 2024இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீபத்தில் இந்தியாவின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ஒரு பயிற்சியில் காணப்பட்டார்.

வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது.

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51இல் தரம்பிர் தங்கம் வென்றார்.

பாராலிம்பிக்கில் மின்னிய மற்றொரு தமிழ் மண்ணின் வைரம்: துளசிமதி முருகேசன்

22 வயதான பாரா-ஷட்லர் துளசிமதி முருகேசன் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.