LOADING...
பாராலிம்பிக்ஸ் ஜூடோ: கபில் பர்மருக்கு வெண்கலம் பதக்கம்; இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஐ எட்டியது
பாராலிம்பிக்ஸ் ஜூடோவில் வரலாறு படைத்த இந்திய வீரர் கபில் பர்மர்

பாராலிம்பிக்ஸ் ஜூடோ: கபில் பர்மருக்கு வெண்கலம் பதக்கம்; இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஐ எட்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 06, 2024
08:12 am

செய்தி முன்னோட்டம்

பார்வையற்ற ஜூடோ விளையாட்டு வீரரான கபில் பர்மர், ஆடவருக்கான 60 கிலோ (ஜே1) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஜூடோவில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கம் என்ற வரலாறு படைத்தார். 24 வயதான பர்மர், தனது எதிரணியான பிரேசிலின் எலியேல்டன் டி ஒலிவேராவை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் 10-0 என்ற கணக்கில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் பெற்று போட்டித்தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இந்தியாவின் பாராலிம்பிக் கமிட்டி குறைந்தபட்சம் 25 பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post