சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. முதல் போட்டி சென்னையிலும், இரண்டாவது போட்டி கான்பூரிலும் நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி தொடரை தவறவிட்ட விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் இந்த தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர். எனினும், 16 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லை. முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு நீட்டிக்கப்பட்ட ஓய்வு அளிக்கப்பட்டு, சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளார்.
முதல் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்
துலீப் டிராபி முதல் சுற்று ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்துவீச்சை வழிநடத்த உள்ளனர். இதற்கிடையில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அடானிய இந்திய அணியின் சுழல் பிரிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்ப்ரீத் பும்ரா, யாஷ் தயாள்.