காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகட், தனது பயணத்தில் நாடு தனக்கு ஆதரவளித்துள்ளது என்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். காங்கிரஸில் இணைந்தது குறித்து வினேஷ் போகட் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன. பெண்களுடன் நிற்கும் ஒரு கட்சியில் நான் இணைந்ததில் பெருமைப்படுகிறேன், சதக் முதல் சன்சாத் வரை போராடத் தயாராக இருக்கிறேன்." என்றார்.
காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு
வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற மூத்த தலைவர்களை வியாழக்கிழமை அவரது 10 ராஜாஜி மார்க்கில் சந்தித்தனர். மேலும், போகட் வெள்ளிக்கிழமை இந்திய ரயில்வேயில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். புனியா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர், அதே சமயம் போகட் 2024 ஒலிம்பிக்ஸில், ஒரு ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இந்த நிலையில் அவர் தனது 50 கிலோ எடைப் பிரிவில் 100 கிராம் கூடுதல் எடையைக் கொண்டிருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.