செப்டம்பர் 11 முதல் சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; 55 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரரான ஷாருக்கான் உள்ளிட்ட 55 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் தெற்காசிய தடகள சம்மேளனத்தின் ஜூனியர் போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 பெண்களும் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அணிகள் இந்த மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. சுமார் 210 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியை மூன்று நாட்களும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்
ஆடவர்: 100மீ: வருண் ஊரி மனோகர், மிருத்யம் ஜெயராம் தொண்டபதி 200மீ: பார்டிக் மகாரானா, மிருத்யம் ஜெயராம் தொண்டபதி. 400மீ: ஜெய் குமார், ரிஹான் சி. 800மீ: வினோத் குமார், போபண்ணா கிளாப்பா. 1,500மீ: ராகுல் சர்னாலியா, பிரியான்ஷு. 3,000மீ ஸ்டீபிள் சேஸ்: ஷாருக்கான், மோஹித் சவுத்ரி. 110 மீ தடை தாண்டுதல்: ஹரிஹரன் கதிரவன், நயன் பிரதீப் சர்தே. உயரம் தாண்டுதல்: சாகர் ராய், ஜுவல் தாமஸ். நீளம் தாண்டுதல்: முகமது அட்டா சஜித், ஆர்.சி.ஜித்தின் அர்ஜுனன். மும்முறை தாண்டுதல்: பூபேந்திர பிஷ்ட், ரவிபிரகாஷ். குண்டு எறிதல்: அனுராக் சிங் காலேர், சித்தார்த் சவுத்ரி. வட்டு எறிதல்: ரித்திக், அதுல். ஈட்டி எறிதல்: டிபன்ஷு சர்மா, ரோஹன் யாதவ்.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் (தொடர்ச்சி)
ஆடவர் 4x100 மீ தொடர் ஓட்டம்: எம் ஜெயராம் தொண்டபதி, மகேந்திர சாந்தா, கார்த்திகேயன் எஸ், வருண் ஊரி மனோகர், வல்லிபி ஹிமதேஜா. மகளிர்: 100மீ: அபிநயா ராஜராஜன், வி சுதீக்ஷா. 200மீ: உன்னதி ஐயப்பா பொல்லண்ட், நீரு பதக். 400மீ: நீரு பதக், சாண்ட்ரா மோல் சாபு. 800மீ: லக்சிதா வினோத் சாண்டிலியா, தன்வி மாலிக். 1,500மீ: லக்சிதா வினோத் சாண்டிலியா, வினிதா. 3,000மீ: பிராச்சி அங்குஷ், ஷில்பா திஹோரா. 100மீ தடை தாண்டுதல்: உன்னதி ஐயப்பா போலண்ட், சபிதா டோப்போ. உயரம் தாண்டுதல்: பூஜா, மொஹூர் முகர்ஜி.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் (தொடர்ச்சி)
மகளிர்: நீளம் தாண்டுதல்: பிரதிக்ஷா யமுனா, லக்ஷண்யா எஸ்என். மும்முறை தாண்டுதல்: ரிஷிகா அவஸ்தி, பிரதிக்ஷா யமுனா. குண்டு எறிதல்: தமன்னா, பூஜா குமாரி. வட்டு எறிதல்: அமானத் கம்போஜ், அனிஷா. ஈட்டி எறிதல்: தீபிகா, பூனம். 4x100 மீ தொடர் ஓட்டம்: அபிநயா ராஜராஜன், வி சுதீக்ஷா, நான்சி, நியோல் அன்னா கொர்னேலியோ, ருஜுலா அமோல் போன்ஸ்லே.