தீவிர உடற்பயிற்சியில் ரோஹித் ஷர்மா; வைரலாகும் புகைப்படங்கள்
ஜூன் மாதம் நடந்த டி20 உலகக்கோப்பை 2024இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா, சமீபத்தில் இந்தியாவின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ஒரு பயிற்சியில் காணப்பட்டார். இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படங்களில், ரோஹித் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்ட பிறகு உதவி பயிற்சியாளராக பொறுப்பேற்ற அபிஷேக் நாயர் இந்திய அணி வீரர்களின் பயிற்சிக்கு உதவி வருகிறார். இந்தியாவிற்கு அடுத்து வங்கதேசம், நியூசிலாந்து போன்ற அணிகளுடனான போட்டிகள் இருந்தாலும், மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பரில் தொடங்க உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி உள்ளது குறிப்பிடத்தக்கது.