பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆடவர் ஈட்டி எறிதல் எப்41 பிரிவில் போட்டியிட்ட நவ்தீப் சிங் முதலில் வெள்ளி வென்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தங்கம் வென்ற ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம் தங்கமான தரம் உயர்த்தப்பட்டது. இதேபோல், மகளிர் பிரிவில் டி12 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போட்டியிட்ட சிம்ரன் ஷர்மா வெண்கலம் வென்றார். இருவர் குறித்தும் தனித்தனியான எக்ஸ் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் இருவரும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகத் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 7 தங்கம் உட்பட மொத்தம் 29 பதக்கங்களை வென்றது.