NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி
    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

    ஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    09:10 am

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முன்னதாக காங்கிரஸின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தில் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

    போகட்டுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இருப்பினும், அகில இந்திய கிசான் காங்கிரஸின் செயல் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

    சுரேந்தர் பன்வார் சோனிபட்டில் இருந்தும், ஜக்பீர் சிங் மாலிக் கோஹானாவிலிருந்தும், பாரத் பூஷன் பத்ரா ரோஹ்டக்கிலிருந்தும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அரசியல்

    போகட்டின் அரசியல் பயணம் மற்றும் விளையாட்டு வீரர்களின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு

    கடந்த ஆண்டு அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் போகட் மற்றும் புனியா இருவரும் முன்னணியில் இருந்தனர்.

    காங்கிரஸில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே, போகட் விளையாட்டு வீரர்களின் போராட்டத்தை கையாண்டதற்காக பாஜகவை விமர்சித்தார், பிஜேபி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவளித்தன என்று கூறினார்.

    அவர்களின் கடினமான காலங்களில் காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவளித்ததாகவும் புனியா கூறினார்.

    "எங்களுடன் நிற்குமாறு அனைத்து பாஜக பெண் எம்.பி.க்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் அவர்கள் வரவில்லை." என்று அவர் கூறினார்.

    ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காங்கிரஸ் கட்சியின் ஹரியானா சட்டசபை முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

    #HaryanaPolls2024 | Congress releases its first list of candidates for the upcoming Haryana Assembly elections.

    Vinesh Phogat to contest from Julana, and Bhupinder Singh Hooda from Garhi Sampla-Kiloi pic.twitter.com/0GJzcEBvla

    — ANI (@ANI) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வினேஷ் போகட்
    ஹரியானா
    மல்யுத்தம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வினேஷ் போகட்

    EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன? மல்யுத்தம்
    'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல் ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகட் தகுதி நீக்கம், அடுத்து என்ன நடக்கும்? விளையாட்டு
    ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்த போட்டி

    ஹரியானா

    ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும் கலவரம்
    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் காவல்துறை
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  காவல்துறை
    மதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை கலவரம்

    மல்யுத்தம்

    36 வயதில் முன்னாள் WWE சாம்பியன் பிரே வியாட் மாரடைப்பால் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி மல்யுத்த வீரர்கள்
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி மல்யுத்த போட்டி
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி உலக சாம்பியன்ஷிப்
    Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025