ஊக்க மருந்து சர்ச்சை, குழுவின் தொடர் ஆதரவு..US Open போட்டியில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர்
US Open டென்னிஸ் போட்டி தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்றுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த செய்தி டென்னிஸ் சமூகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியபோது, தனக்கு தொடர்ந்து ஆதரவளித்த தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜானிக் சின்னர். தனது தொழில் வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் இருந்தபோது தொடர்ந்து ஆதரவளித்ததற்காக அவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை சர்ச்சைகளுக்கும் இடையில் தனது விளையாட்டின் மூலம் பதிலளித்துள்ளார் ஜானிக். சீசன் முடிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று, உலக நம்பர் 1 என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தினார். ஊக்கமருந்து சர்ச்சையைப் பற்றிய உரையாடலை அவர் கையாண்ட விதம் மற்றும் விளையாட்டில் அவர் ஆதிக்கம் செலுத்திய விதம், அவரின் மனஉறுதியின் பிரதிபலிப்பாகும்.
ஊக்க மருந்து சர்ச்சை
சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு நிறுவனம் (ITIA) ஆகஸ்ட் 15 அன்று விசாரணையை நடத்தியது. அவரது ஆதரவுக் குழுவின் உறுப்பினர் ஒரு சிறிய காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக க்ளோஸ்டெபோல் அடங்கிய ஓவர்-தி-கவுண்டர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தியதால் நேர்மறை சோதனை முடிவுகள் வந்ததாக சின்னர் விளக்கினார். குழு உறுப்பினர் பின்னர் சின்னருக்கு மசாஜ் செய்ததன் விளைவாக, தோல் தொடர்பு மூலம் அந்த மருந்து உடலுக்குள் சென்றுள்ளது. ஊக்கமருந்து வழக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இத்தாலிய வீரர் சின்னர்ஸ் தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு இடையே சின்னர்ஸ் விளையாட்டு தடைகளில் இருந்து தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.