உக்ரைன்: செய்தி
364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்
ரஷ்ய-உக்ரைன் போரின் போது, உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான், கடந்த ஆண்டு இரண்டு தனியார் யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுஎஸ்) நிறுவனங்களுடனான ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து குறைந்தது 364 மில்லியன் டாலர்களைப் பெற்றதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் "அழிவுகரமான" கொள்கைகளால் அணு ஆயுதம், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா
ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்த கூற்றுக்களை நிரூபிக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மனித உயிரிழப்புகள் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு ரஷ்ய தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுவன் மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் டொராண்டோ மாநகரில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார்.
கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.
போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யாவுக்கு உதவுவது குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு
கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம்
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் நாட்டினை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது.
ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன்: கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் இருந்து 5 கிமீ (3-மைல்) சுற்றளவு வரை வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த BRICS மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்ஆப்பரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.
உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.
உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு
நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம்
தெற்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சோவியத் கால அணை இன்று(ஜூன் 6) தகர்க்கப்பட்டது.
உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.
உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு
போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யாவின் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 500 அமெரிக்கர்களை தங்கள் நுழைய தடைவிதித்து அறிவித்திருக்கிறது ரஷ்யா.
ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு
பல மாதங்களுக்கு பிறகு, உக்ரைனில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் உள்ள பல நகரங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்வதற்கு உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி
கிழக்கு உக்ரேனிய பகுதிகளில் ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலை உக்ரைன் முறியடித்ததால், டிசம்பரில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20,000க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்ததற்கு , உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா
உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த நகரமான பெல்கோரோட் மீது ரஷ்ய போர் விமானம் ஒன்று "தற்செயலாக" வெடிகுண்டை வீசியது.
உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்
கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று(ஏப் 12) தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தற்போதுள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் சேராமல், MBBS இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று(மார்-28) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்
ரஷ்ய- உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் போது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது மாபெரும் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு
ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது.
உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா
ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சகம் இன்று(பிப் 21) அமெரிக்க தூதர் லின் ட்ரேசியை வரவழைத்து, உக்ரைனில் இருந்து "வீரர்கள் மற்றும் ஆயுதங்களை" அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.
உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர்
உக்ரைனில் நடைபெறும் மாஸ்கோவின் தாக்குதலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(பிப் 20) உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா
உக்ரைன் போரை நிறுத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாக இன்று(பிப் 11) கூறியுள்ள அமெரிக்கா, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.