உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுவன் மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 11 மாத குழந்தை உட்பட 28 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் பகுதியில் ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. ஒரு ஏவுகணை மண்ணுக்குள் பாய்ந்து பள்ளத்தை ஏற்படுத்தியதாகவும், மற்றொன்று அங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(செப்டம்பர் 5 ஆம் தேதி) கிழக்கு உக்ரைன் பகுதியில் நடந்த தாக்குதலில் 51 நபர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யா நேற்றைய தாக்குதலுக்கு பயன்படுத்திய இஸ்கந்தர்( Iskander) வகை ஏவுகணைகளையே இந்த தாக்குதலுக்கும் பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.