விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: பாகிஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
41 வயதில் மாபெரும் சாதனை! முகமது நபியின் உலக சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே வீரர் கிரேக் எர்வின்
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்றது.
மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை: அதிக ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்தின் உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து: டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சர்வதேச டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்து வரலாறு படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு 2026: இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தல்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மனு பாக்கர், பவன் ஷெராவத் தலைமையில் இந்திய அணி! 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் முறைப்படி தொடக்கம்
ஜப்பானின் அய்சி-நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மிகப்பிரமாண்டமாக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றும் பலனில்லை! டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து இந்தியா வெளியேற்றம்
தென்கொரியத் தலைநகர் சீயோலில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை 2026 (Davis Cup 2026) தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு அன்று இந்திய பிரியாணி; இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளின் தலைமை சமையல் கலைஞர்; யார் இவர்?
சர்வதேச விளையாட்டு திருவிழாவில் உணவளிப்பது ஒரு முழுமையான உணவு அமைப்பை நிர்வகிப்பதற்குச் சமம் என்கிறார் ஆசிய விளையாட்டு போட்டிகளின் தலைமை சமையல் அமைப்பாளர் பீட்டர் ரைட்.
ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரி கட்டுகிறோம்: உச்ச நீதிமன்ற கேள்விக்கு பிசிசிஐ பதில்
தேசிய விளையாட்டு ஆளுகைச் சட்டத்தின் கீழ் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ரோஹித் சர்மா விவகாரத்தில் விரிசல்: தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அகர்கர் விலக முடிவு
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவிக் காலம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அப்பொறுப்பில் நீடிக்க விருப்பமில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐ-க்குத் தெரிவித்துள்ளார்.
15 வயதில் சாதனை! ISSF ஜூனியர் உலகக்கோப்பை ஷாட்கன் போட்டியில் இந்தியாவின் யுகன் சக்திவேல் தங்கம் வென்று அசத்தல்
இத்தாலியின் போர்பெட்டோ நகரில் நடைபெற்று வரும் ISSF ஜூனியர் உலகக்கோப்பை ஷாட்கன் 2026 துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் யுகன் சக்திவேல் முத்துகுமார் தங்கப் பதக்கம் வென்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் தொடக்க போட்டி: வரலாற்று சாதனை படைக்க வரும் ஆஸ்திரேலிய டி20 லீக்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக்கின் (BBL) 16-வது சீசனின் தொடக்க ஆட்டம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்ற பூனவல்லா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்
பிரபல தொழில்முனைவோர் பூனவல்லாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வெஸ்ட்வியூ கிரிக்கெட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட மூன்று கிரிக்கெட் அணிகளைக் கைப்பற்றுவதற்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா - நடிகை ஆக்ரிதி அகர்வால் பிரிவு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா மற்றும் பிரபல நடிகை ஆக்ரிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எம்எஸ் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: ரூ.100 கோடி வழக்கின் புதிய பின்னணி
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது எழுந்த சூதாட்ட சர்ச்சையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் குற்றம்சாட்டினார்.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்டிற்கு இடமில்லை! வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிப்பு
செப்டம்பர் 27 முதல் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான 15 பேர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அஜித் அகர்க்கர் BCCI தேர்வுத் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகல்? புதிய தலைவர் யார்?
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்கள் தேர்வுத் குழுத் தலைவராக செயல்பட்டு வரும் அஜித் அகர்க்கர், தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CSK-வில் இணைகிறாரா டி. நடராஜன்? பதிலுக்கு DC கேட்ட 'இடதுகை' பந்துவீச்சாளர்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை வாங்குவதற்கு ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்தது.
அணியில் வாய்ப்பு மற்றும் விமர்சனங்கள் குறித்து உடைத்துப் பேசிய சஞ்சு சாம்சன்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெறும் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், அணியில் தொடக்க வீரர் இடத்திற்கான கடும் போட்டி மற்றும் வெளிபுற விமர்சனங்கள் குறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸியின் 'லாஸ்ட் டான்ஸ்': ஏஎஃப்ஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்வதேச கால்பந்து உலகின் தலைசிறந்த நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்தும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சிறையில் இம்ரான் கான், கவலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள்: பென்னி வாங்கிற்கு ஆஸ்திரேலிய கேப்டன்கள் கடிதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: 800 புள்ளிகளைக் கடந்து இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி புதிய வரலாற்றுச் சாதனை
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 8-வது முறையாக கோப்பையை கைப்பற்றி முத்திரை பதித்தது.
சச்சின், கங்குலி, டிராவிட் மீண்டும் பிசிசிஐ-க்குள் வர வேண்டும்: சுனில் கவாஸ்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் நட்சத்திர வீரர்களின் பரந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
"CSK தலைமைப் பயிற்சியாளராக தோனியே தகுதியானவர்": கூறியது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி நீக்கம் நியாயமற்றது: தேர்வுக்குழுவை விளாசிய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படாததை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 36 விக்கெட்டுகள்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரிணி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் ஸ்ரீ சரிணி புதிய சாதனை படைத்துள்ளார்.
US Open 2026 டென்னிஸ்: பென் ஷெல்டனை வீழ்த்தி முதல் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாதனை
ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி, தனது முதல் யூ.எஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை 2026: பாகிஸ்தான் அதிகாரியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி
மகளிர் ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சீனாவை வீழ்த்தி ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி
சீனாவில் நடைபெற்ற 2026 ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஹாட்ரிக் பட்டம் கைநழுவியதால் ராக்கெட்டை உடைத்த சபலென்கா! யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டியில் எலினா ரைபாகினா வெற்றி
யுஎஸ் ஓபன் 2026 மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தானின் எலினா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20: அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது யார்?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி புது தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
ரஞ்சி கோப்பை 2026-27: ஹைதராபாத் அணியின் கேப்டனாக முகமது சிராஜ் நியமனம்
ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடருக்கான ஹைதராபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிஎஸ்கே அணியில் 25% பங்குகள் கேட்டாரா தோனி? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 25 சதவீதப் பங்குகளைக் கேட்டதாக வெளியான தகவல்களை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சந்தேகமே வேண்டாம்! 2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பளிச் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து எழும் சந்தேகங்களை அவரது குழந்தைப்பருவப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா முற்றிலும் நிராகரித்துள்ளார்.
காயங்களால் தொடர் பின்னடைவு! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை; இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை உடற்பயிற்சி மருத்துவருக்கான (Physiotherapist) கம்லேஷ் ஜெயினின் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தயாராகும் ரோஹித் சர்மா: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடருக்கான தனது தீவிர பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 19-0 என வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வரும் 2026 மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 19-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி: பும்ரா கம்பேக்! ஹர்ஷித் ராணா விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகளுக்கு 70 வயது வரம்பு: புதிய விதிகளைத் திருத்திய இந்திய ஒலிம்பிக் சங்கம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) நிர்வாகிகள் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட 70 வயது உச்சவரம்பு நிர்ணயித்து சங்கத்தின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலன் டி ஓர் 2026 பரிந்துரை பட்டியல் வெளியீடு: மெஸ்ஸிக்கு இடம்; ரொனால்டோ மீண்டும் புறக்கணிப்பு
சர்வதேச கால்பந்து அரங்கின் உயரிய விருதான 2026 பாலன் டி ஓர் விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய இறுதிப் பரிந்துரைப் பட்டியலை பிரெஞ்சு பத்திரிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.