Loading...
பாலன் டி ஓர் 2026 பரிந்துரை பட்டியல் வெளியீடு: மெஸ்ஸிக்கு இடம்; ரொனால்டோ மீண்டும் புறக்கணிப்பு
பாலன் டி'ஓர் 2026 விருதிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாலன் டி ஓர் 2026 பரிந்துரை பட்டியல் வெளியீடு: மெஸ்ஸிக்கு இடம்; ரொனால்டோ மீண்டும் புறக்கணிப்பு

எழுதியவர் Vasuki
Sep 09, 2026
04:41 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து அரங்கின் உயரிய விருதான 2026 பாலன் டி ஓர் விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய இறுதிப் பரிந்துரைப் பட்டியலை பிரெஞ்சு பத்திரிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், எட்டு முறை இவ்விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 17-வது முறையாகப் பரிந்துரைக்கப்பட்டு, ஒன்பதாவது முறையாக விருதை வெல்லும் முனைப்பில் உள்ளார். அதேநேரத்தில், போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து நான்காவது ஆண்டாக இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

பட்டியல்

பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற முக்கிய வீரர்கள்

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபின்ஹா இப்பட்டியலில் இடம்பெறாத நிலையில், அல் நஸர் அணியில் ரொனால்டோவுடன் விளையாடும் சாடியோ மானே இடம் பெற்றுள்ளார்.

2026 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கு வெற்றி கோல் அடித்த ஃபெரான் டோரஸ், இளம் நட்சத்திரம் லாமின் யமால் மற்றும் கடந்த ஆண்டு விருதை வென்ற உஸ்மான் டெம்பேலே ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

மகளிர் பிரிவில், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இவ்விருதை வென்று வந்த பார்சிலோனாவின் ஐடானா போன்மதி, காயம் காரணமாகப் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாததால் இம்முறை பரிந்துரைக்கப்படவில்லை.

பிற பிரிவுகள்

பிற பிரிவுகளுக்கான முக்கிய பரிந்துரை விவரங்கள்

ஆண்கள் பிரிவில் சிறந்த இளம் வீரருக்கான விருதுக்குப் பாவ் குபார்சி, லாமின் யமால், வாரன் சயீர்-எமரி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

சிறந்த கோல்கீப்பருக்கான யாசின் விருதுக்கு எமிலியானோ மார்டினெஸ், திபோ கோர்ட்டுவா, டேவிட் ராயா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த பயிற்சியாளர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் மைக்கேல் அர்டேட்டா, லூயிஸ் டி லா ஃபியூன்டே, லூயிஸ் என்ரிக் ஆகியோர் உள்ளனர்.

ஆண்டின் சிறந்த கிளப் பிரிவில் ஆர்சனல், பேயர்ன் முனிச், பிஎஸ்ஜி ஆகிய அணிகளும், மகளிர் பிரிவில் பார்சிலோனாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT