மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 19-0 என வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வரும் 2026 மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 19-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கைதேம் ஷிலைமா சானு தலைமையிலான இந்திய அணி, போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் பூஜா சாஹு இந்தியாவின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, முதல் பாதியிலேயே 10-0 எனப் பிரம்மாண்ட முன்னிலை பெற்றது.
சாதனை
அரையிறுதிக்குத் தகுதி
இடைவேளைக்குப் பிறகும் பாகிஸ்தானின் தடுப்பாட்டத்தை சீர்குலைத்த இந்திய வீராங்கனைகள், அடுத்தடுத்து 9 கோல்களை சுருட்டினர்.
இந்திய வீராங்கனை பூஜா 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சனிகா சந்ரகாந்த் மானே, மது சிடார், ரோஷினி ஐந்த் மற்றும் சுப்ரியா யாதவ் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்து அசத்தினர்.
லீக் சுற்றில் ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தி குரூப் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி, காலிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியில் மலேசியா மற்றும் தென் கொரியா இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா எதிர்கொள்ளும்.