Loading...
சிஎஸ்கே அணியில் 25% பங்குகள் கேட்டாரா தோனி? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!
தோனி அணிப் பங்குகளைக் கேட்டதாக வெளியான வதந்தியை மறுத்த சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கே அணியில் 25% பங்குகள் கேட்டாரா தோனி? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!

எழுதியவர் Vasuki
Sep 12, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 25 சதவீதப் பங்குகளைக் கேட்டதாக வெளியான தகவல்களை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தோனி அணியில் 25 சதவீதப் பங்குகளைக் கேட்டுப் பின்னர் அதை 20 சதவீதமாகக் குறைத்ததாகவும், நிர்வாகம் அவருக்கு 5.5 சதவீதப் பங்குகளை வழங்க முன்வந்ததாகவும் அண்மையில் செய்திகள் பரவின. இந்நிலையில், இத்தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது எனத் தெளிவுபடுத்தியுள்ள சிஎஸ்கே நிர்வாகத் தரப்பு, இத்தகைய கோரிக்கையை தோனி ஒருபோதும் நிர்வாகத்திடமோ அல்லது என்.சீனிவாசனிடமோ முன்வைக்கவில்லை எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விளக்கம்

சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சிஎஸ்கே மூத்த நிர்வாகி ஒருவர், எம்.எஸ்.தோனி எங்களிடம் இதுபோன்ற ஒரு கோரிக்கையை ஒருபோதும் கேட்டதில்லை; இதுபற்றி நாங்கள் எந்தவித ஆலோசனையும் நடத்தியதும் கிடையாது என்றார்.

அதேபோல் என்.சீனிவாசனிடம் அவர் இது குறித்துப் பேசியதாகவும் எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியைப் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனமாக நிர்வகித்து வரும் நிலையில், என்.சீனிவாசன் குடும்பத்தினர் 55 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுப்பாட்டுப் பங்குகளை வைத்துள்ளனர்.

பொதுச் சந்தையில் சுமார் 30 கோடிப் பங்குகள் உள்ள நிலையில், சந்தை மதிப்பின்படி தோனி வசம் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள் கருத்து மற்றும் சந்தை மதிப்பு

இந்த வதந்திகள் குறித்துப் பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இது முற்றிலும் கற்பனையான செய்தி என்றும், யாரோ திட்டமிட்டுப் பரப்பிய தகவல் என்றும் சாடியுள்ளார்.

ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே போன்ற மாபெரும் சர்வதேச பிராண்ட் மற்றும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியில் 25 சதவீதப் பங்குகள் என்பது கோடிக்கணக்கான டாலர் மதிப்புடையது என்றும், முதலீடு செய்யாமல் அத்தகைய பங்கை எவரும் எளிதில் வழங்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தோனி பங்குகள் கேட்டதாக வெளியான தகவல் எந்தவித முகாந்திரமும் அற்றது என்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT