Loading...
CSK-வில் இணைகிறாரா டி. நடராஜன்? பதிலுக்கு DC கேட்ட 'இடதுகை' பந்துவீச்சாளர்
டி. நடராஜனை வாங்குவதற்கு CSK ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்தது.

CSK-வில் இணைகிறாரா டி. நடராஜன்? பதிலுக்கு DC கேட்ட 'இடதுகை' பந்துவீச்சாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
12:10 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை வாங்குவதற்கு ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்தது. இருப்பினும், ஆரம்பத்தில் அவரை விட்டுக்கொடுக்க மறுத்த டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி நிர்வாகம், தற்போது தானாக முன்வந்து சிஎஸ்கேவுடன் டிரேடிங் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அணியிலுள்ள டி. நடராஜனை சென்னை அணிக்கு விட்டுக்கொடுக்க ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியில் உள்ள பேக்கப் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான குர்ஜாப்னித் சிங் அல்லது கலீல் அகமது ஆகிய இருவரில் ஒருவரைத் தங்களுக்கு டிரேட் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

டிரேடிங்

நடராஜனை விடுவிக்க டெல்லி முடிவு செய்தது ஏன்?

தற்போது 35 வயதாகும் டி. நடராஜனால் ஐபிஎல் 2027 சீசன் வரை மட்டுமே சிறப்பாக விளையாட முடியும் என டெல்லி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

மேலும், கடந்த ஐபிஎல் 2026 சீசனில் 10 போட்டிகளில் பந்துவீசிய நடராஜன் 11.48 எகனாமியில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

எனவே, அவரை விடுவித்துவிட்டு நீண்ட கால அடிப்படையில் பயன்படும் ஒரு இளம் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டுவர டெல்லி கேபிடல்ஸ் திட்டமிட்டுள்ளது.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகிய முதன்மை பந்துவீச்சாளர்கள் தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டதால், பேக்கப் பௌலர்களாக உள்ள கலீல் அகமது அல்லது குர்ஜாப்னித் சிங்கை விட்டுக்கொடுப்பதில் பெரிய சிக்கல் இருக்காது எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT