Loading...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்ற பூனவல்லா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்ற பூனவல்லா குழுமத்திற்கு சிசிஐ ஒப்புதல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்ற பூனவல்லா குழுமத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
08:01 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தொழில்முனைவோர் பூனவல்லாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வெஸ்ட்வியூ கிரிக்கெட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட மூன்று கிரிக்கெட் அணிகளைக் கைப்பற்றுவதற்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய வர்த்தக நகர்வாகப் பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் இந்த இரு நிறுவனங்களும் விளையாட்டு வர்த்தகத் துறையில் தங்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

ஒப்பந்தம்

மூன்று சர்வதேச லீக் அணிகளைக் கைப்பற்றும் ஒப்பந்தம்

இந்திய போட்டி ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் முதன்மையாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகள் கைப்பற்றப்பட உள்ளன.

இதுமட்டுமன்றி தென்னாப்பிரிக்க லீக் தொடரில் பங்கேற்கும் பார்ல் ராயல்ஸ் அணியும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

மேலும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் பார்படோஸ் ராயல்ஸ் அணியையும் இந்த நிறுவனங்கள் வாங்கவுள்ளன.

பரிசீலனை

CCI வழக்கின் எண் மற்றும் பரிசீலனை விவரங்கள்

இந்த முக்கிய வர்த்தகப் பரிவர்த்தனையை இந்தியப் போட்டி ஆணையம் 'C-2026/07/1444' என்ற வழக்கு எண்ணின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து ஆய்வு செய்தது.

சந்தைப் போட்டி விதிகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை அமைந்துள்ளதா என்பது குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது.

அனைத்து சட்ட மற்றும் வர்த்தக விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டதை அடுத்து, இந்த மூன்று கிரிக்கெட் பிராஞ்சைஸிகளையும் வாங்குவதற்கு ஆணையம் முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதனால் இந்த ஒப்பந்தம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT