Loading...
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தயாராகும் ரோஹித் சர்மா: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி
ரோஹித் சர்மா ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது

மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தயாராகும் ரோஹித் சர்மா: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
06:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடருக்கான தனது தீவிர பயிற்சிகளை தொடங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டி: செப்டம்பர் 27 (திருவனந்தபுரம்) இரண்டாவது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 30 (கௌஹாத்தி) மூன்றாவது ஒருநாள் போட்டி: அக்டோபர் 3 (நியூ சண்டிகர்) இத்தகவலை ரோஹித் சர்மாவின் உத்தியோகபூர்வ ஊடகக் குழுவான டீம் ரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

முற்றுப்புள்ளி

ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

39 வயதான ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது 388 ரன்கள் இலக்கை சேஸ் செய்கையில் அவர் அடித்த 138 ரன்கள் அதிரடி சதம் விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிசிசிஐ இணைச் செயலாளர் தேவஜித் சைக்கியா, "ரோஹித் தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கடைசிப் போட்டியில் கூட 138 ரன்கள் விளாசியுள்ளார். சூழல் இப்படி இருக்கும் போது அவரது ஓய்வு குறித்து வதந்திகளைப் பரப்புவது தேவையற்றது" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT