Loading...
இந்தியா, நியூசிலாந்தின் உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து: டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது
இந்தியா, நியூசிலாந்து உலக சாதனையை முறியடித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இந்தியா, நியூசிலாந்தின் உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து: டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது

எழுதியவர் Vasuki
Sep 20, 2026
01:12 pm

செய்தி முன்னோட்டம்

ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சர்வதேச டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்து வரலாறு படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில், 125 ரன்கள் என்ற வெற்றி இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 120-க்கும் மேற்பட்ட ரன்களை விரட்டிப்பிடித்த அணி என்ற உலக சாதனையை இங்கிலாந்து தன்வசப்படுத்தியுள்ளது.

தொடர் வெற்றி

பாகிஸ்தான் சாதனையைச் சமன் செய்த தொடர் வெற்றி

இலங்கையை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 அரங்கில் இலங்கை அணிக்கு எதிராகத் தொடர்ந்து 15-வது வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு எதிராகத் தோல்வியே காணாமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட முழு உறுப்பினர் அணிக்கு எதிராகத் தொடர்ந்து அதிக வெற்றிகளைக் குவித்த பாகிஸ்தானின் (ஜிம்பாப்வேக்கு எதிராக 15 தொடர் வெற்றிகள்) உலக சாதனையை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

முதலிடம்

இந்தியாவை முந்தி மீண்டும் முதலிடம்

125 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ்பட்லர் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், கேப்டன் ஹாரிபுரூக் 21 பந்துகளில் 33 ரன்களும் குவித்து, 38 பந்துகளிலேயே 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

62 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து, இதற்கு முன்பு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வைத்திருந்த 10 ஓவர் சாதனையை முறியடித்து 10 ஓவர்களுக்குள் 120+ ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது.

அண்மையில் ஆப்கானிஸ்தானை 3-0 என வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணியைப் பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டி20 அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து மீண்டும் உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

ADVERTISEMENT