LOADING...

09 Nov 2025


இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்

வரும் வாரத்தில் அமெரிக்காவின் முக்கியமான பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படும் வரை தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இப்போதை நிலையிலேயே நீடிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் வரலாற்றுச் சாதனை

ரஞ்சி கோப்பை பிளேட் குழு போட்டியில் மேகாலயா அணியின் ஆகாஷ் குமார் சவுத்ரி, ஒரு இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்

வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 க்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) சார்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) போராட்டம் நடத்தப்பட்டது.

1981 முதல் அரியர் வைத்த மாணவர்கள் பட்டம் பெற அரிய வாய்ப்பு; சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம், அரியர் வைத்த மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் டெஸ்லா விற்பனை சரிவு; மாடல் ஒய் கார்களின் விற்பனை 37% குறைந்தது

அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, அதன் மாடல் ஒய் எஸ்யூவி கார்கள் இந்தியச் சந்தையில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடி; புதிய எச்சரிக்கை வெளியிட்டது  என்பிசிஐ

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் கைதுகள் (Digital Arrests) என்ற சைபர் கிரைம் மோசடி குறித்துத் தேசியப் பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரவீந்திர ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சி?

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு

அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இமெயிலை ஹேக் செய்து  பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.

தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உயிர் காக்கும் உடலுறுப்பை 21 நிமிடங்களில் இலக்கைச் சேர உதவிய சென்னை மெட்ரோ ரயில்

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒரு அரிய மருத்துவ அவசரப் பணியில் விரைந்து செயல்பட்டுப் பெரும் பங்காற்றியுள்ளது.

101வது ஏடிபி பட்டம்; டென்னிஸ் வரலாற்றில் நோவக் ஜோகோவிச் வரலாற்றுச் சாதனை

செர்பியாவின் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், ஹெலனிக் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் இத்தாலியின் லோரன்சோ முசெட்டிக்கு எதிராக ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்றார்.

பூட்டானுக்குப் பிரதமர் மோடி நவம்பர் 11 முதல் இரண்டு நாள் அரச முறைப் பயணம்

இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பூட்டானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு அபாயம்: பல பகுதிகளில் காற்றின் AQI தரக் குறியீடு 400ஐ கடந்தது

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்

இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

08 Nov 2025


இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்

நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

தளபதியின் கச்சேரி ஆரம்பம்; ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜயின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

₹8,200 கோடி முதலீட்டில் கேடிஎம் உற்பத்தியை ஆஸ்திரியாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற பஜாஜ் ஆட்டோ திட்டம்

ஐரோப்பிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான கேடிஎம்மின் செயல்பாடுகளைப் புத்துயிர் அளிக்கும் ஒரு முக்கியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் உற்பத்தித் தளத்தை ஆஸ்திரியாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற பஜாஜ் ஆட்டோ தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஆபரேஷன் திரிசூலம் முப்படைப் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை பங்கேற்பு

இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை தற்போது ஆபரேஷன் திரிசூலம் என்ற கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் முப்படைப் பயிற்சிகளின் வரிசையில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ₹21 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.

இனி ஆன்லைனில் உங்களுக்காக உங்கள் வேலையை ஏஐ செய்யும்; பெர்பிளெக்சிட்டி புது அப்டேட் வெளியீடு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான பெர்பிளெக்சிட்டி, அதன் காமெட் எனப்படும் ஆன்லைன் டிஜிட்டல் அசிஸ்டன்டில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

குளிர்காலத்திற்கு ஏற்ற இறைச்சி கோழியா இல்லை மீனா? அசைவ பிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

குளிர்காலத்தில் வெப்பமான மற்றும் சத்தான உணவுகளுக்கான ஆர்வம் அதிகரிக்கும்போது, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தார்.

ஐசிசியின் இந்த புதிய விதியால் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இடமில்லை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.

புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் நுரையீரல் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த புரிதல்கள் குறைவாக இருப்பதுடன், இது பயம், களங்கம் மற்றும் பாதி உண்மை/பொய்களால் சூழப்பட்ட ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது.

உருவக் கேலியை அனுமதிக்க முடியாது: நடிகை கவுரி கிஷன் உருக்கமான அறிக்கை

திரைப்பட நடிகை கவுரி கிஷன் உருவக் கேலி விவகாரம் குறித்து மனம் திறந்து, "உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நாம் கடந்து செல்ல வேண்டும்." என்று வலியுறுத்தி ஓர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இனி காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்; மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவல் முயற்சி; 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவ முயற்சி நடப்பதாக இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அன்று துல்லியமான உளவுத் தகவல் கிடைத்தது.

நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு உறவு உறுதி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் பிரைம் வீடியோ தொடர்களின் தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு ஆகியோரின் உறவு குறித்த ஊகங்கள், நடிகையின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன.

டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.