LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு பட்டியல்

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
08:36 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை மெட்ரோ: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும். உடுமலைப்பேட்டை: இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை வடக்கு: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். பல்லடம்: கரடிவாவி, புளியம்பட்டி வடுகபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். திருவாரூர்: முத்துப்பேட்டை, கீழநம்மன்குறிச்சி, உப்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.