LOADING...
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் வரலாற்றுச் சாதனை
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் வரலாற்றுச் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
07:01 pm

செய்தி முன்னோட்டம்

ரஞ்சி கோப்பை பிளேட் குழு போட்டியில் மேகாலயா அணியின் ஆகாஷ் குமார் சவுத்ரி, ஒரு இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) சூரத்தில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில், ஆகாஷ் குமார் சவுத்ரி மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் லிமர் டாபியின் ஓவரில் ஆறு பந்துகளிலும் சிக்ஸர்கள் பறக்கவிட்ட அவர், அடுத்த ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸர்களை விளாசி, முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள்

முதல்தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

இதன் மூலம், முதல்தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த காரி சோபர்ஸ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்தார். மேலும், ஆகாஷ் குமார் வெறும் 11 பந்துகளில் அரை சதம் அடித்து, முதல் தர கிரிக்கெட்டின் அதிவேக அரை சதம் என்ற புதிய உலக சாதனையை நிலைநாட்டினார். இதற்கு முன், 2012ஆம் ஆண்டு 12 பந்துகளில் அரை சதம் அடித்த லீசெஸ்டர்ஷைரின் வேய்ன் நைட்டின் சாதனையை இவர் முறியடித்தார். நேரம் அடிப்படையில் பார்த்தால், ஆகாஷ் குமார் 9 நிமிடங்களில் அரை சதம் அடித்தது, முதல் தர கிரிக்கெட்டின் இரண்டாவது அதிவேக அரை சதமாக உள்ளது. கிளைவ் இன்மேன் 8 நிமிடங்களில் அடித்ததே அதிவேக சாதனையாக உள்ளது.