LOADING...
ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
05:18 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. காப்பாவில் (Gabba) நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி, மோசமான வானிலை காரணமாக வெறும் 4.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது நான்காவது இருதரப்பு டி20 தொடரை இழந்தது. இதில் மூன்று தொடர்களை இந்தியாவிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் மிட்செல் மார்ஷ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியத் துவக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் நல்ல ஆடுகளத்தில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

சாதனை 

அபிஷேக் ஷர்மா சாதனை

அபிஷேக் ஷர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். முதல் ஓவரில் க்ளென் மேக்ஸ்வெல் அவருடைய எளிதான கேட்சை தவறவிட்டார். இதையடுத்து அவர் 528 பந்துகளில் 1000 டி20 சர்வதேச ரன்களை எடுத்து, ஐசிசியின் முழு நேர உறுப்பினர் நாடுகளிடையே வேகமாக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஷுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்கள் குவித்து, சிறப்பாக விளையாடினார். இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய 21 நிமிடங்களில் மழை இல்லாத போதும், மோசமான வானிலை முன்னறிவிப்பு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது.