LOADING...
இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்
இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு

இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
07:24 pm

செய்தி முன்னோட்டம்

வரும் வாரத்தில் அமெரிக்காவின் முக்கியமான பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படும் வரை தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இப்போதை நிலையிலேயே நீடிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பிற நாடுகள் மீதான டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரிகள் குறித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் சீனாவின் முக்கியப் பொருளாதாரத் தரவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மையும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் பணவியல் கொள்கை குறித்த கருத்துக்களையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். இதுவே குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை நிலவரம்

கடந்த வாரம் சர்வதேச சந்தையில் (Comex) டிசம்பர் விநியோகத்திற்கான தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,009.8 அமரிக்க டாலரில் நிறைவடைந்தது. உள்நாட்டுச் சந்தையில், MCX-இல் டிசம்பர் விநியோகத்திற்கான தங்கம் 10 கிராமுக்கு ₹1,21,067 இல் முடிந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தம் நீடிப்பதால் முக்கியப் பொருளாதாரத் தரவுகள் வெளியாவது தாமதமாகிறது. இது பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் முடிவைச் சற்றுக் கடினமாக்கலாம். இதனால், தங்கம் விலையில் பெரிய சரிவு தடுக்கப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், பாதுகாப்பான முதலீட்டுத் தேவை, மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான கொள்முதல் மற்றும் வட்டி விகிதக் குறைப்பிற்கான எதிர்பார்ப்புகள் போன்ற காரணிகள் தற்போதைக்குத் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன.