LOADING...
நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு உறவு உறுதி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு உறவு உறுதி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
08:39 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் பிரைம் வீடியோ தொடர்களின் தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு ஆகியோரின் உறவு குறித்த ஊகங்கள், நடிகையின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன. இருதரப்பிலும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளிவராத நிலையில், பொது நிகழ்வுகளில் அவர்கள் தொடர்ந்து ஒன்றாகக் காணப்படுவது இந்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்து வருகிறது. சமந்தா சமீபத்தில் தனது வாசனை திரவிய பிராண்டான சீக்ரெட் அல்கெமிஸ்டை அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இன்ஸ்டாகிராம் பதிவில், நடிகை தமன்னா பாட்டியா உள்ளிட்ட பிற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள் குறித்து சமந்தா பதிவு

இந்தப் படங்களுடன், சமந்தா வெளியிட்ட குறிப்பில், "நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், எனது வாழ்க்கையில் மிகவும் தைரியமான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இடர்களை எடுப்பது, என் உள்ளுணர்வை நம்புவது மற்றும் நான் செல்ல செல்ல கற்றுக் கொள்வது. இன்று, நான் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுகிறேன். நான் சந்தித்த பிரகாசமான, கடினமாக உழைக்கும் மற்றும் மிகவும் உண்மையான சிலருடன் நான் பணியாற்றுவதற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். பெரும் நம்பிக்கையுடன், இது ஆரம்பம் மட்டுமே என்று எனக்குத் தெரியும்." என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தற்போது, ரக்த் யூனிவர்ஸ்: தி பிளடி கிங்டம் என்ற தொடருக்காக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement