LOADING...
தளபதியின் கச்சேரி ஆரம்பம்; ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

தளபதியின் கச்சேரி ஆரம்பம்; ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
06:57 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜயின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் இந்த படத்தை எச்.வினோத் இயக்க கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டுப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' சனிக்கிழமை (நவம்பர் 8) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் விஜய் உடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post