27 Oct 2024

ஆர்க்டிக் பனி உருகுவதால் உலகளவில் ஏற்படும் மாற்றங்கள்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை கடுமையாக சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு

ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்; செப்.2026க்குள் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் சி-295 ராணுவ விமானங்களுக்கான புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்க உள்ளனர்.

100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

2026இல் ககன்யான், 2028இல் சந்திரயான் 4; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான புதிய காலக்கெடுவை இஸ்ரோ தலைவர் சோமநாத் வெளியிட்டுள்ளார்.

49 மருந்துகள் தரமற்றது; மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பகீர் தகவல்

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதன் சமீபத்திய தர மதிப்பீட்டில், 49 மருந்துகளைத் தரமற்றதாக அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு; அமெரிக்க பொறியாளர்கள் சாதனை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யூ) பொறியாளர்கள், மின்சார வாகன தொழிற்துறையை மறுவடிவமைக்கக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நம்மள முடிச்சு விட்டீங்க போங்க; சுனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்; பிக் பாஸ் வீட்டில் என்னாச்சு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல், இன்று (அக்டோபர் 27) வெளியான ப்ரோமோவில் சுனிதாவை எல்லோரும் கார்னர் செய்ததை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15 வரை நீட்டிப்பு; மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு

ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 க்கான கார்ப்பரேட் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15, 2024 வரை நீட்டித்துள்ளது.

'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்

விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.

எடைக்குறைப்பு முதல் ஆஸ்துமா வரை; கருஞ்சீரக டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா!

பொதுவாக சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவற்றின் ஊட்டச்சத்து விவரங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.

விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா; பின்னணி என்ன?

சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரணும்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் வந்த கோரிக்கை

நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.

இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு

இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.

26 Oct 2024

92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 92 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல்

சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

முழங்கால் ஆரோக்கியத்திற்கு ஓடுவது நன்மையா அல்லது தீங்கு விளைவிப்பதா? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஓடுவது என்பது, அதை சரியாக செய்தால் அதன் ஆரோக்கிய நலன்களுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?

புனேவில் நடந்து முடிந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.

அமரன் பட ப்ரோமோஷன்; பிக் பாஸ் தமிழ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்

அமரன் திரைப்படத்தின் புரமோஷனுக்காக பிக் பாஸ் தமிழ் 8 வீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.

எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவைப் பகிர்ந்த பின்னர் விசாரணையில் உள்ளார்.

12ஆம் வகுப்பில் தோல்வி; 19வது வயதில் சொந்த நிறுவனம்; ரூ.1,100 கோடிக்கு அதிபதியான அரோராவின் விடாமுயற்சி

டிஏசி செக்யூரிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான த்ரிஷ்னீத் அரோரா, 2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் ரூ.1,100 கோடி நிகர மதிப்புடன் இடம் பிடித்துள்ளார்.

INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து

புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எக்ஸ் தளத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்ட ப்ளூஸ்கை சமூக ஊடகத்திலும் கட்டண சந்தா திட்டம் அறிமுகம்

வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமான ப்ளூஸ்கை கட்டணச் சந்தா சேவையைத் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜெமினி வெர்ஷன் 2.0ஐ 2024 டிசம்பரில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்

கூகுள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜெமினியின் வெர்ஷன் 2.0ஐ டிசம்பரில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் படத்தை கௌரவிக்கும் வகையில் புதிய கார்; ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு

பிரிட்டன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனித்துவம் வாய்ந்த டூ-டோன் பாண்டம் மாடலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை

சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை ஈரானிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, எந்தவொரு இஸ்ரேலிய நடவடிக்கைக்கும் உரிய எதிர்வினை இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா?

புனேயில் நடைபெற்று வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிவித்துள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது.

அத்தியாயம் ஜீரோ; எல்சியூவின் தோற்றம் குறித்த 10 நிமிட குறும்படத்தை வெளியிடுகிறார் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் மாநகரம் முதல் லியோ வரை தோல்வியே கொடுக்காமல், தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த முறை வியாழக்கிழமை வரவுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.