Page Loader
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தொடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 27, 2024
04:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது. விக்கிரவாண்டி அருகே உள்ள வி,சாலை பகுதியில் இம்மாநாடு கட்சிப் பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளுடன் பரபரப்பாக தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திர சேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். கட்சித் தலைவர் விஜய் விரைவில் மேடைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொண்டர்களின் வருகையால் மாநாட்டு திடலில் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

தீர்மானங்கள்

19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்

சிலர் மயக்கம் அடைந்ததுடன், காலை உணவிற்கு வசதி இல்லாததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிரமமடைந்தனர். மாநாட்டில் விஜய் நடித்த படப்பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு, நிகழ்ச்சிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டு மேடை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விஜயின் வருகையை எதிர்பார்த்து நிகழ்ச்சியிடத்தில் தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பி கொண்டிருந்தனர். விஜய் இந்த மாநாட்டில் பேசப்போகும் விஷயங்கள் என்னென்ன என்பதே கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.