நம்மள முடிச்சு விட்டீங்க போங்க; சுனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்; பிக் பாஸ் வீட்டில் என்னாச்சு?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல், இன்று (அக்டோபர் 27) வெளியான ப்ரோமோவில் சுனிதாவை எல்லோரும் கார்னர் செய்ததை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த ப்ரோமோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் வீட்டில் மேனேஜர் போல் யார் செயல்படுகிறார்கள், அதாவது, யார் ஒருவர் வேலைகளில் பங்களிக்காமல் முதலாளியைப் போல் நடந்து கொள்கிறார் என்று ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளிடம் தனித்தனியாகக் கேட்டார். இதில், பெண்கள் அணியில், சுனிதா மேனஜர் போல் நடப்பதாக போட்டியாளர் தர்ஷிகா குறிப்பிட்டார். சுனிதா இதற்கு பதில் கொடுக்கும் விதமாக கொடுத்த ஒரு சிரிப்பு, ஹவுஸ்மேட்களிடையே சிரிப்பலைத் தூண்டியது.
ஆண்கள் அணியில் மேனேஜர் போல் நடப்பதாக முத்துக்குமரனை குறிப்பிட்ட போட்டியாளர்கள்
இதில், மற்ற ஹவுஸ்மேட்கள் வெவ்வேறு போட்டியாளர்கள் பொறுப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறினாலும், அதிக ஓட்டுக்களுடன் சுனிதா இருப்பது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அவர் அதிகளவில் முதலாளியாக தோன்றியதாகவும், வீட்டு வேலைகளில் ஆர்வமில்லாமல் இருப்பதாகவும் தர்ஷிகா விளக்கினார். இதை பார்த்த ரசிகர்கள் சுனிதாவை கலாய்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆண்கள் அணியில், முத்துக்குமரன் மேனேஜர் போல் நடப்பதாக தீபக் குறிப்பிட்டார். மேலும், அருன் சுயமாக செயல்படாமல் மற்றவர்களை சார்ந்து இருக்கிறார் என்று ஜெஃப்ரி கூறினார். இதற்கிடையே, இந்த வாரத்திற்கான எவிக்சனில் தர்ஷா வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது இன்று இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்போதுதான் தெரிய வரும்.