அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர் வருகை தருகின்றனர். இந்நிலையில், கட்சியினரின் வருகையை எளிதாக்கும் வகையில், தவெக ஆதரவாளர்களுக்கு இலவச டோல் அணுகல் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது கட்சி உறுப்பினர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே சுமார் 45,000 பேர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அங்குள்ள கட்சி தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு கட்சியினர் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
டோல்கேட் அதிகாரிகளிடம் கோரிக்கை
கட்சியின் முதல் மாநாடு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், தவெக சார்பில், மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி டோல்கேட்டில் செலுத்தாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என நேரடியாக கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே, டோல்கேட்டில் இலவச சேவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் எளிதாக செல்வதற்காக, உள்ளூர் போலீசார் நான்கு கிலோமீட்டருக்கு வெள்ளை கோடு பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை, விழுப்புரம் காவல்துறையால் செயல்படுத்தப்படும் ஜீரோ-ட்ராஃபிக் கொள்கைகளுடன் இணைந்து, நெரிசலைக் குறைத்து பாதுகாப்பைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.