ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது.
தற்போதைய நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் அணியில் மிகப்பெரிய மாற்றங்களுடன் 18 பேர் கொண்ட இந்த அணியை அறிவித்துளளது.
காயத்தில் இருந்து இன்னும் குணமடையாத முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் 18 பேர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முதல் டெஸ்ட் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
புனேவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுல் அணியில் இடம்பிடித்துள்ளார்.
துணை கேப்டன்
துணை கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமனம்
ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெர்த்தில் நடைபெறும் தொடக்க டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதனால், அவருக்கு பதிலாக முதல் போட்டியில் மட்டும் துணை கேப்டனாக உள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர். காத்திருப்பு வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ அறிவிப்பு
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) October 25, 2024
Squads for India’s tour of South Africa & Border-Gavaskar Trophy announced 🔽#TeamIndia | #SAvIND | #AUSvIND pic.twitter.com/Z4eTXlH3u0