NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்
    தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்

    'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.

    விஜயின் கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் மாநாட்டுத் திடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் அங்கு உள்ளது குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட பெரிய கட்அவுட்களில், இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையேயான நட்புறவை உணர்த்தும் வகையில், "அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்" என்ற பதாகைகள் இடம்பெற்றிருந்தன.

    மேலும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள தனியார் ஆம்புலஸ் வாகனங்கள் பலவற்றில் அஜித்தின் படங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சினிமா

    சினிமா மோதல் மறைந்து துளிர்க்கும் ஒற்றுமை

    இந்த நல்லெண்ணக் காட்சியானது தமிழ் சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கிடையில் பாரம்பரியமாக இருக்கும் மோதல்களுக்கு எதிராக உள்ளது.

    எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன் மற்றும் விஜய்-அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர் குழுக்களுக்கு இடையேயான எப்போதும் ஒருவிதமான போட்டி மனப்பான்மை இருந்து வந்துள்ளது.

    இந்த நடிகர்கள் தங்களுக்குள் இணக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொண்டாலும், ரசிகர்களிளிடையே மோதல் நீடித்து, தற்போது சமூக ஊடகங்களிலும் அவை எதிரொலித்து வருகின்றன.

    இந்நிலையில், தவெக மாநாட்டில் உள்ள இன்றைய நிகழ்வு, தமிழ்த் திரையுலகில் ஒற்றுமையான அணுகுமுறையை வளர்க்கும் வகையில், ரசிகர்களிடையே இருக்கும் மோதல் போக்குகளை முடிவுக்கு கொண்டு வருமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக வெற்றி கழகம்
    நடிகர் விஜய்
    விஜய்
    நடிகர் அஜித்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    நடிகர் விஜய்

    கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி கனடா
    சென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய் சினிமா
    தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து பா ரஞ்சித்
    வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு? சினிமா

    விஜய்

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா? நடிகர் விஜய்
    திடீரென விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த GOAT படக்குழு; காரணம் இதுதான்! விஜயகாந்த்
    நாளை தமன் இசையில், விவேக் வரிகளில் தவெக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகம் நடிகர் விஜய்
    இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய்  தமிழக வெற்றி கழகம்

    நடிகர் அஜித்

    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்
    #AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட் நடிகர்
    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் த்ரிஷா
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025