
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கு ரமண்தீப் சிங், விஜய்குமார் வைஷாக் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகமான மயங்க் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை.
காயம் காரணமாக ரியான் பராக், மயங்க் அகர்வால் மற்றும் ஷிவம் துபே இடம் பெறவில்லை என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியது.
இந்திய அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி, நவம்பர் 8ஆம் தேதி டர்பனில் முதலில் போட்டியில் விளையாட உள்ளது.
அதைத் தொடர்ந்து நவம்பர் 10 அன்று க்கெபெர்ஹாவிலும், நவம்பர் 13 அன்று செஞ்சுரியனிலும், நவம்பர் 15 அன்று ஜோஹன்னஸ்பர்க்கிலும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக மோத உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ அறிவிப்பு
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) October 25, 2024
Squads for India’s tour of South Africa & Border-Gavaskar Trophy announced 🔽#TeamIndia | #SAvIND | #AUSvIND pic.twitter.com/Z4eTXlH3u0