
இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை ஈரானிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, எந்தவொரு இஸ்ரேலிய நடவடிக்கைக்கும் உரிய எதிர்வினை இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
தஸ்னிம் செய்தி நிறுவனம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "இஸ்ரேல் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் விகிதாசார எதிர்வினையை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை." என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானில் உள்ள ராணுவ தளங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள், ஆயுதங்கள் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்புகளை குறிவைத்தன.
அக்டோபர் 1ஆம் திகதி ஈரானிய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போர்
போருக்கு தயாராகுமாறு ஈரான் தலைவர் கருத்து
தாக்குதலுக்கு முன்னதாக, ஈரானின் தலைவர் அயத்துல்லா அல் கமேனி இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு தயாராகுமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்டால், ஈரான் பதிலடி கொடுக்காது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடுமையான தாக்குதல் ஏற்பட்டால், ஈரான் 1,000 பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் பதிலடி கொடுக்கக்கூடும் என்று ஈரானின் புரட்சிகர காவலர் படையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், அமெரிக்கா இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
பிற சாத்தியமான பதில்களில் பிராந்தியத்தில் ப்ராக்ஸி தாக்குதல்களை அதிகரிப்பது மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகளாவிய எரிசக்தி விநியோகங்கள் மற்றும் கடல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் திட்டமிடலாம் என அஞ்சப்படுகிறது.