விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

04 Feb 2023

ரஷ்யா

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக் கூடாது! ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு!

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்குப் பிறகு முதல் உச்சிமாநாட்டை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்களை விளையாட்டு உலகில் மீண்டும் பங்கேற்க அனுமதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன்!

ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் புதன்கிழமை (பிப்ரவரி 3) தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! 2007 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா அறிவிப்பு!

2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த ஜோகிந்தர் ஷர்மா, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) அறிவித்தார்.

கோப்பா இத்தாலியா 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது ஜுவென்டஸ்!!

2022-23 கோப்பா இத்தாலியா கால்பந்து தொடரில் 1-0 என்ற கோல் கணக்கில் லாசியோவை வீழ்த்தி ஜுவென்டஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

ரஞ்சி கோப்பை 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால் அணி!

2022-23 ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணி ஜார்கண்ட் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ரஞ்சி கோப்பை 2022-23 : உத்தரகாண்டை வீழ்த்தி அரையிருதிக்கு முன்னேறியது கர்நாடகா!

2022-23 ரஞ்சி டிராபியின் காலிறுதியில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியுடன் கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கிரிக்கெட்ட விட்டே போயிடலாம்னு நினைச்சேன்! மனம் திறந்த இளம் வீரர் ஷாஹீன் அப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் ஷாஹீன் அப்ரிடி, காயம் காரணமாக, 2022 ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினார்.

பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே காயத்தால் விலகல்!

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே தனது அணியின் சாம்பியன்ஸ் லீக் கடைசி 16 முதல் லெக் டை மற்றும் பேயர்ன் முனிச்சிற்கு எதிரான கால்பந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு!

மகளிர் பிரீமியர் லீக்கின் (மகளிர் ஐபிஎல்) முதல் சீசனுக்கான ஏல தேதி பிப்ரவரி 13 இல் மும்பையில் நடக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முத்தரப்பு டி20 தொடர் : இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் உள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்ற டி20 முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக, இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடர் : இந்திய அணி வீரர்களின் சாதனையும் சறுக்கலும்!

சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடரும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

4000+ ரன்கள், 100+ விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா புது சாதனை!

அகமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக ஆர்சிபி உதவியுடன் ஆஸ்திரேலிய அணி ஆயத்த முகாம்!

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் பிப்ரவரி 9 அன்று விளையாட உள்ளது.

கராபோ கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!

இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த கராபோ கோப்பையின் அரையிறுதியில் (இரண்டாவது லெக்) மான்செஸ்டர் யுனைடெட் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 : ஷுப்மன் கில்லால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் உடல்நலக்குறைவால் புதன்கிழமையன்று (பிப்ரவரி 1) காலமானார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி! தொடரையும் வென்றது இந்தியா!

மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 : அரைசதம் அடிக்க முடியவில்லையே! வருத்தத்தில் ராகுல் திரிபாதி!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இந்திய டாப்-ஆர்டர் பேட்டர் ராகுல் திரிபாதி அரைசதம் அடிக்க முடியாமல் போனதால் வருந்துவதாக கூறியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்!

சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உயர் தரவரிசையை எட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்டார்.

ரஞ்சி கோப்பை 2022-23 : முதல்தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை எட்டினார் மயங்க் அகர்வால்!

உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அபார அரைசதம் அடித்தார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : உஸ்மான் கவாஜாவுக்கு விசா கிடைக்காததால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவர்களின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழா முடிந்ததும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட்டது.

ரஞ்சி கோப்பை 2022-23 : எலும்பு முறிவால் பாதியிலேயே வெளியேறினார் ஹனுமா விஹாரி!

இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக நடந்து வரும் ரஞ்சி டிராபி 2022-23 கால் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆந்திர கேப்டன் ஹனுமா விஹாரிக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் முதல் போட்டியிலிருந்து நீக்கம்!

இந்திய அணிக்கு பெரும் அடி என்று சொல்லக்கூடிய வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது

மகளிர் பிரீமியர் லீக்கிற்கான (மகளிர் ஐபிஎல்) வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 11 ஆம் தேதி புதுடெல்லி அல்லது பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தெரிவித்துள்ளது.

வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமனம்!

இரண்டு வருட காலத்திற்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக சண்டிக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் செவ்வாய்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை வென்ற ஜெர்மனி ஹாக்கி அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

2023 ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியனான ஜெர்மனி, இப்போது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இருந்து விலகுவதாக உறுதி செய்துள்ளார்.

31 Jan 2023

ஐபிஎல்

உலகின் டாப் 5 விளையாட்டு அணிகளில் இடம்பெற்ற ஆர்சிபி! இன்ஸ்டாகிராம் சர்வேயில் புது சாதனை!

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்குகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரே இந்திய விளையாட்டு அணி என்ற தனித்துவமான சாதனையை பெற்றுள்ளது.

படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்ததற்காக, லக்னோ பிட்ச் கியூரேட்டர் நீக்கப்பட்டுள்ளார்.

முத்தரப்பு டி20 தொடர் : மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டனில் உள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் திங்கட்கிழமை (ஜனவரி 30) இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கான புதிய இடமாக ஜோத்பூரின் பர்கத்துல்லா கான் ஸ்டேடியம் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2023 : நான்காவது முறையாக ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2023 இல், ஆஸ்திரேலிய ரன் மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித், மதிப்புமிக்க ஆலன் பார்டர் பதக்கத்தைப் பெற்றார்.

ஹாக்கி உலகக்கோப்பையில் படுதோல்வி! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா!

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், ஹாக்கி உலகக் கோப்பை முடிவடைந்த ஒரு நாளில் திங்கட்கிழமை (ஜனவரி 30) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இன்னும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்!

இந்திய அணியின் மூத்த பேட்டர் முரளி விஜய், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜனவரி 30) அறிவித்தார்.

தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து!

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து, 50 ஓவர் வடிவத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஹாக்கி உலகக்கோப்பை 2023 : மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி பெல்ஜியத்தை வென்றது.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பட்டத்தை வென்றார் ஜோகோவிச்! தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளின் அடிப்படையில் நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஹாக்கி உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி!

நடந்து முடிந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சனிக்கிழமை (ஜனவரி 28) தென்னாப்பிரிக்காவை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.