Page Loader
உலகின் டாப் 5 விளையாட்டு அணிகளில் இடம்பெற்ற ஆர்சிபி! இன்ஸ்டாகிராம் சர்வேயில் புது சாதனை!
உலகின் டாப் 5 விளையாட்டு அணிகளில் இடம்பெற்ற ஆர்சிபி

உலகின் டாப் 5 விளையாட்டு அணிகளில் இடம்பெற்ற ஆர்சிபி! இன்ஸ்டாகிராம் சர்வேயில் புது சாதனை!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2023
06:45 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), 2022 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்குகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரே இந்திய விளையாட்டு அணி என்ற தனித்துவமான சாதனையை பெற்றுள்ளது. ஒரு சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனத்தின் தனியார் கணக்கெடுப்பில், ரியல் மாட்ரிட் 2022 இல் இன்ஸ்டாகிராமில் 2.09 பில்லியன் தொடர்புகளுடன் (Interactions) முதலிடத்தில் உள்ளது. எஃப்சி பார்சிலோனா 1.78 பில்லியன் தொடர்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 1.41 பில்லியன் தொடர்புகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப் இன்ஸ்டாகிராமில் 1.07 பில்லியன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆர்சிபி 948 மில்லியன் தொடர்புகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பகுப்பாய்வு நிறுவன சர்வே ட்வீட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பட்டியலில் ஆர்சிபி இடம் பெற்றதன் பின்னணி

மற்ற நான்கு அணிகளும் கால்பந்து விளையாட்டுடன் தொடர்புள்ள நிலையில், கால்பந்து அல்லாத ஒரே அணியாக ஆர்சிபி முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து ஆர்சிபி, உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு அணிக்காக விளையாடிய ஒரே இந்திய வீரரான விராட் கோலியின் பெரும்பாலான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 234 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட கோலி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பிரபலமான நபராக உள்ளார். கெய்ல் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் சேர்க்கை ரசிகர்களின் ஆதரவை அதிகரித்தது. மேலும் 2022 ஐபிஎல்லில் பாப் டுபிளெஸ்ஸிஸ் வருகையால், கோப்பையை முதல்முறையாக வென்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும், இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.