மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்!
இந்தியாவில் மகளிர் ஐபிஎல்லுக்கு இன்று (ஜனவரி 23) மகளிர் கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது. மகளிர் ஐபிஎல்லில் டெண்டருக்கான விண்ணப்பங்களை வாங்கியவர்கள், இன்று தொழில்நுட்ப ஏலங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நேரம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப ஏலங்கள் குறித்து நாளை மாலை பிசிசிஐ முடிவை அறிவிக்கும். இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் புதன்கிழமை (ஜனவரி 25) நிதி ஏலத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும். புதன்கிழமை நிதி ஏலங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில், புதன்கிழமை மாலையே மகளிர் ஐபிஎல்லுக்கான அணிகள் பிசிசிஐயால் அறிவிக்கப்படும்.
டெண்டருக்கான விண்ணப்பங்களை வாங்கிய நிறுவனங்கள்
ஐஎல்டி20 உரிமையாளர்களான அதானி (வளைகுடா ஜெயண்ட்ஸ்) மற்றும் கேப்ரி குளோபல் (ஷார்ஜா வாரியர்ஸ்) டெண்டர் விண்ணப்பத்தை எடுத்துள்ளன. மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கிளேசர் நிறுவனமும் விண்ணப்பத்தை எடுத்துள்ளது. செட்டிநாடு சிமென்ட் மற்றும் ஜேகே சிமென்ட் ஆகிய இரண்டு சிமென்ட் நிறுவனங்கள் விண்ணப்பத்தை எடுத்துள்ளன. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமம், நீலகிரி குழுமம், ஏடபிள்யூ கட்குரி குழுமம் ஆகியவையும் களத்தில் உள்ளன. டெல்லி கேபிடல்ஸின் கூட்டு உரிமையாளர்களான ஜிஎம்ஆர் குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ குரூப் ஆகியவை தனித்தனியாக விண்ணப்பங்களை எடுத்துள்ளன. ஏபிஎல் அப்பல்லோ மற்றும் ஹல்டிராம் ஆகியவையும் களத்தில் உள்ளன.