கோப்பா இத்தாலியா 2022-23 : அரையிறுதிக்கு முன்னேறியது ஜுவென்டஸ்!!
2022-23 கோப்பா இத்தாலியா கால்பந்து தொடரில் 1-0 என்ற கோல் கணக்கில் லாசியோவை வீழ்த்தி ஜுவென்டஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கிளெய்சன் பிரேமர் ஒரே கோலை அடித்தார். பிரேமர் கோல் அடித்த பிறகு ஜுவென்டஸ் கடுமையாக போட்டி கொடுத்தது. இரு தரப்பும் கடுமையாக மோதிய நிலையில், பிரேமருக்கு பிறகு இறுதி வரை யாரும் கோல் அடிக்காததால், ஜுவென்டஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஜுவென்டஸ் இப்போது இரண்டு லெக் கொண்ட அரையிறுதி மோதலில் ஃபேவரிட் இன்டர் மிலானை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், ஃபியோரெண்டினா மற்றும் கிரெமோனிஸ் மற்றொரு இரண்டு லெக் மோதலில் அரையிறுதியில் மோத உள்ளார்கள்.
ஜுவென்டஸ் அணியின் தனித்துவமான பதிவு
லாசியோவின் 11 கோல் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், ஜுவென்டஸ் 12 கோல் முயற்சிகளை மேற்கொண்டது. இதில் ப்ரெமர் பாதி நேரத்தில் மேற்கொண்ட கோல் முயற்சி வெற்றி பெற, ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. ஜுவென்டஸ் அதன்பிறகு தனது நிலையை தக்கவைத்துக் கொண்டு, லாசியோ கோல் போடும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்றது. ஆப்டாவின் கூற்றுப்படி, 2008-09ல் கோப்பா இத்தாலியா காலிறுதிப் போட்டிகள் ஒற்றை லெக் வடிவத்திற்குத் திரும்பியதிலிருந்து, ஜுவென்டஸ் தங்கள் சொந்த மண்ணில் விளையாடிய 10 காலிறுதி நிகழ்வுகளில் ஒன்பது முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரே ஒரு விதிவிலக்காக, ஜனவரி 27, 2011 அன்று ஏஎஸ் ரோமாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.