ஹாக்கி உலகக்கோப்பை 2023 : மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி பெல்ஜியத்தை வென்றது. 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற பிறகு, ஜெர்மனி தனது மூன்றாவது உலகக் கோப்பையைப் பெறுவதற்கான 17 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்டியது. போட்டியின் முடிவில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் தலா 2 கோல் அடித்து 2-2 என சமநிலையில் இருந்ததால், போட்டி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது. அதிலும் பெல்ஜியம் கடைசி வரை போராடினாலும், ஜெர்மனி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றது. ஜெர்மனியின் நிக்லாஸ் வெல்லன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹாக்கி உலகக் கோப்பையை அதிக முறை கைப்பற்றியதில் ஜெர்மனி இரண்டாம் இடம்
நான்கு முறை (1971, 1978, 1982, மற்றும் 1994) ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்குப் பின்னால் தற்போது ஜெர்மனி இரண்டாம் உள்ளது. ஜெர்மனி 2002, 2006 மற்றும் தற்போது 2023இல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் இதுவரை மூன்று பட்டன்களை கைப்பற்றி ஜெர்மனியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், பாகிஸ்தான் (1978 மற்றும் 1982), ஜெர்மனி (2002 மற்றும் 2006) மற்றும் ஆஸ்திரேலியா (2010 மற்றும் 2014) ஆகிய அணிகளுக்குப் பிறகு பெல்ஜியம் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ந்து வெல்லும் நான்காவது அணியாக மாறியிருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை ஹாக்கி உலகக்கோப்பையை இதுவரை முறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.