Page Loader
ரஞ்சி கோப்பை 2022-23 : முதல்தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை எட்டினார் மயங்க் அகர்வால்!
முதல்தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை எட்டினார் மயங்க் அகர்வால்

ரஞ்சி கோப்பை 2022-23 : முதல்தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை எட்டினார் மயங்க் அகர்வால்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2023
04:01 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அபார அரைசதம் அடித்தார். அவர் 109 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஒரு 83 ரன்களை விளாசினார். இதன் மூலம் மயங்க் அகர்வால் முதல் தர கிரிக்கெட்டில் 6,500 ரன்களை பூர்த்தி செய்தார். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், உத்தரகாண்ட் 116 ரன்களுக்கு சுருண்ட நிலையில், கர்நாடகா தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் மற்றும் ரவிக்குமார் சமர்த் (82) ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். தனது 36வது முதல் தர கிரிக்கெட் அரைசதத்தை அடித்து நொறுக்கிய அகர்வால், இறுதியில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் அபய் நேகியின் பந்தில் அவுட்டானார்.

மயங்க் அகர்வால்

முதல்தர கிரிக்கெட் மற்றும் இந்திய அணியில் மயங்க் அகர்வால் செயல்திறன்

அகர்வால் நவம்பர் 2010இல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் இதுவரை 89 ஆட்டங்களில் 45 என்ற சிறப்பான சராசரியில் 6,540 ரன்களைக் குவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 14 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் அடங்கும். 304 (நாட் அவுட்) அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இது தவிர, இந்திய அணிக்காக, மயங்க் 21 போட்டிகளில் விளையாடி 41.83 சராசரியில் 1,488 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். 243 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். அவர் கடைசியாக இலங்கைக்கு எதிராக மார்ச் 2022 இல் விளையாடினார்.