Page Loader
மகளிர் ஐபிஎல் 2023 : வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது
மகளிர் ஐபிஎல் 2023 வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது

மகளிர் ஐபிஎல் 2023 : வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2023
01:40 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் பிரீமியர் லீக்கிற்கான (மகளிர் ஐபிஎல்) வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 11 ஆம் தேதி புதுடெல்லி அல்லது பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. முதலாவதாக, மூன்று மகளிர் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஐஎல்டி 20 மற்றும் சிஎஸ்ஏ20 இல் அணிகளை வைத்துள்ளனர். இரண்டு போட்டிகளும் முறையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் முடிவடையும். இரண்டாவது காரணம், அணி உரிமையாளர்கள் தங்கள் பயிற்சி ஊழியர்களைக் கூட்டுவதற்கு குறைந்த நேரமே உள்ளது.

மகளிர் ஐபிஎல்

அனைத்து போட்டிகளையும் மும்பையிலேயே நடத்த திட்டம்

போட்டி தொடர் முழுவதையும் நடத்த மும்பையில் இரண்டு இடங்களை பிசிசிஐ ஒதுக்கியுள்ளது. அதன்படி பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் அகாடமியில் போட்டிகள் நடக்க உள்ளன. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 முடிவடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு மகளிர் ஐபிஎல் தொடங்கப்படுவதால், போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக இந்த முறை ஒரே நகரத்தில் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் ஐந்து அணிகள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அகமதாபாத், மும்பை, பெங்களூர், டெல்லி மற்றும் லக்னோவை தளமாகக் கொண்டு செயல்பட உள்ளன.