ஐபோன்: செய்தி
ஐபோனில் பல தொடர்புகளை நீக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
ஐபோன், அதன் யூசர் ஃப்ரன்ட்லி இன்டெர்ஃபேஸ்-ற்காக அறியப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் கேமரா தயாரிப்பிற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ள ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் முக்கிய ஐபோன் உதிரிபாகங்களை, குறிப்பாக கேமரா மாட்யூல்களை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியா மற்றும் 91 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.
கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
CERT-In அல்லது Indian Computer Emergency Response Team , இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
ஆப்பிளின் சமீபத்திய iOS 17.4 புதுப்பிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து சைட்லோடிங் ஆப்ஸ் மற்றும் திருட்டிற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்?
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் புதிய வசதிகளை வழங்கவிருக்கும் ஆப்பிள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களுடைய ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களை வெளியிட்டிருந்தது ஆப்பிள். அந்நிறுவனத்தின் அடுத்த சீரிஸான 16 சீரிஸ் மாடலே அடுத்த வருடம் தான் வெளியாகவிருக்கிறது.
சீனாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் குறிப்பிட்ட மாகாணங்களைச் சேர்ந்த அரசு நிறுவன ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 17-ஐ வெளியிட்டது ஆப்பிள். அந்த இயங்குதளத்திற்கு, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது அப்டேட்டின் பீட்டா சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
மேம்படுத்தப்பட்ட மைக்ரோபோனுடன் வெளியாகவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இந்நிலையில், அந்நிறுவனத்தின் அடுத்த ஐபோன் சீரிஸான ஐபோன் 16 சீரிஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டன.
ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். நான்கு வேரியன்ட்களாக இந்தப் புதிய ஐபோன் 15 சீரிஸ் போன்கள் வெளியாகியிருந்தன.
எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு
இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் ஐபோன்களை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சி செய்வதாகக் கடந்த மாதம் அவர்களுக்கு ஐபோன்கள் மூலமாகவே எச்சரிக்கை செய்தி அனுப்பியிருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.
டிசம்பரில் வெளியாகவிருக்கும் IOS 17.2 இயங்குதள அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?
கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டுடன், ஐபோன்களுக்கான புதிய ஐஓஎஸ் 17 இயங்குதளத்தையும் வெளியிட்டது ஆப்பிள்.
RCS-யை வழங்கும் ஆப்பிளின் திட்டம் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
RCS குறுஞ்செய்தி வசதியை அடுத்த ஆண்டு முதல் ஐபோனிலும் அளிக்க ஆப்பிள் திட்டமிட்டு வருதவாகத் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. தொழில்நுட்ப உலகில் இது பெரிய மாற்றமாகவும் பேசப்பட்டு வந்தது. இதனால் நமக்கு (இந்தியாவில்) என்ன பலன்?
புதிய ஐபோன்கள் அதிக வெப்பமடைவதைத் தடுக்கு ஆப்பிளின் புதிய திட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தங்களுடை புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.
RCS குறுஞ்செய்தி சேவையை ஐபோனில் கொடுக்கத் திட்டமிடும் ஆப்பிள்
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 2024ம் ஆண்டு முதல் தங்களுடைய ஐபோன்களில் RCS (Rich Communication Service) சேவையை வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது
மத்திய ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான CERT-In (Indian Computer Emergency Response Team) ஐபோன் ஹேக்கிங் முயற்சிகள் குறித்த எதிர்க்கட்சிகளின் கூற்றை விசாரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு'
தங்களுடைய ஐபோனை ஹேக் செய்து தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் முயற்சிப்பதாக எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் புகார் தெரிவித்து பதிவுகள் இட்டு வருகிறார்கள்.
சர்வதேச சந்தைக்காக இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் டாடா: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
அடுத்த இரண்டரை ஆண்டுகளில், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணியை டாடா குழுமம் தொடங்கும் என அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
ஐபோன் 15ஐ பாதிக்கின்றனவா, BMW மற்றும் டொயோட்டா நிறுவன கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜர்கள்?
வயர்டு சார்ஜிங்கைத் தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜிங் வசதி உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. இதற்கு முன்னோடியாக ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாகவே வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனேயே தங்களுடைய ஐபோன்களை வெளியிட்டு வருகின்றன.
ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேலும் ஒரு புதிய பிரச்சினை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனையைத் தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடைவில்லை, அதற்குள் அந்தப் புதிய சீரிஸ் ஐபோனில் தொடர்ந்து கோளாறுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்.
பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவானது தாங்கள் அனுமதித்த அளவை விட அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தடை செய்தது பிரான்ஸ்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக்
உலகளவில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஆப்பிள். அந்த நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவு தினம் அக்டோபர் 5.
புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் சூடாகும் பிரச்சினைக்கு முடிவு கட்டிய ஆப்பிள்
கடந்த மாதம் ஆப்பிள் அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் சூடாவதாக பயனாளர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகாரெழுப்பி வந்தனர்.
ஐபோன் 15 சீரீஸில் சூடாகும் பிரச்சினையை சரி செய்யவிருக்கும் ஆப்பிள்
கடந்த மாதம் அக்டோபர் 12 அன்று தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ப்ளஸ் மற்றும் ப்ரோ என நான்கு வகையான 15 சீரிஸ் ஐபோன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய பின்பும் ஆப்பிள் ஐபோன்களின் விலை குறையாதது ஏன்?
பிற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை எப்போதுமே விண்ணை முட்டும் அளவிலேயே இருக்கும். அமெரிக்காவை விட சற்று அல்ல, மிக மிக அதிகமாகவே இருக்கும் இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை.
பழுதான ஐபோன் 13 மாடலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற ஆப்பிள் வாடிக்கையாளர்
பெங்களூரூவைச் சேர்ந்த 30 வயாதன அவெஸ் கான் என்பவர் 2021ம் ஆண்டு அக்டோபரில் புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். வாங்கிய சில மாதங்களிலேயே, அந்த ஐபோனின் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு போனை தொடர்ந்து, ஐபோன்களிலும் வெளியான 'அவசர எச்சரிக்கை'
சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், சோதனை ஓட்டமாக, மத்திய அரசு 'அவசர எச்சரிக்கை' ஃபிளாஷ் செய்தி அனுப்பியதை தொடர்ந்து, இன்று பல ஐபோன்களிலும் இந்த முயற்சி நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களையா இந்தியாவில் விற்பனை செய்கிறது ஆப்பிள்?
2015ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது ஆப்பிள். ஆப்பிள் என்றால் ஆப்பிள் இல்லை, ஆப்பிளின் ஐபோன் அசெம்பிள் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட சில நிறுவனங்கள்.
அதிகம் சூடாகும் ஆப்பிள் 15 சீரிஸ் 'ப்ரோ' மாடல்கள், என்ன செய்யவிருக்கிறது ஆப்பிள்?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள். கடந்த வாரம் முதல், இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கும் வந்தன புதிய 15 சீரிஸ் ஐபோன்கள்.
அதிக ரேஞ்சை கொண்ட U2 சிப்பை ஐபோன் 15ல் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிள்
கடந்த செப்டம்பர் 12ம் தேதியின்று தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸை உலகமெங்கும் வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்தியாவிலும் புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் MRP-யை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஐபோன்15
மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை குறைவு தான் என்றாலும், ஐபோனுக்கென தனி ரசிகர் வட்டம் இந்தியாவிலும் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி, உலகமெங்கும் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.
இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது
கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?
கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட்
தங்களுடைய ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதளத்தை இன்று பொதுப் பயனாளர்களுக்கு வெளியிடுகிறது ஆப்பிள். ஐபோன்களுக்கான IOS 17 இயங்குதளமும், ஐபேடுகளுக்கான ஐபேடுஓஎஸ் 17 இயங்குதளமும் இன்று அறிமுகமாகிறது.
இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி?
ஐபோன் பயனாளர்களின் பெருங்கவலைகளுள் ஒன்று, அது பழுதடைந்தால் சரிசெய்ய ஆகும் செலவு. ஆம், ஆப்பிள் ஐபோன்களை சரி செய்யவது, புதிய ஆப்பிள் சாதனத்தை சற்று கூடுதல் விலையில் வாங்குவதும் ஒன்று தான்.
IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள்
கடந்த வாரம் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மாட்ர்போன்களை வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, தங்களுடைய புதிய IOS 17 இயங்குதளத்தை செப்டம்பர் 18ம் தேதி (நாளை) வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருந்தது ஆப்பிள்.
ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள்
கடந்த செப்டம்பர் 12ல், புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகளுள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள்.
ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்
ஐபோன் 12 யூனிட்களின் அனைத்து விற்பனையையும் நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தை, பிரான்ஸ் வற்புறுத்தியதை அடுத்து, கதிர்வீச்சு தரநிலைகள் காரணமாக ஐபோன் 12 -ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியது.