IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மாட்ர்போன்களை வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, தங்களுடைய புதிய IOS 17 இயங்குதளத்தை செப்டம்பர் 18ம் தேதி (நாளை) வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருந்தது ஆப்பிள்.
இயங்தள அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதில் ஆப்பிளுக்கு நிகர் ஆப்பிள் தான். பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்கள் ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்டை மட்டுமே வழங்கி வரும் நிலையில், ஐபோன்களுக்கு ஐந்து வருட இயங்குதள அப்டேட்டை வழங்கி வருகிறது ஆப்பிள்.
ஆப்பிளைப் பின்பற்றி தற்போது கூகுள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கு வருட இயங்குதள அப்டேட்டை வழங்க முன்வந்திருக்கின்றன.
ஐபோன்
எந்தெந்த ஐபோன்கள் புதிய இயங்குதள அப்டேட்டைப் பெறுகின்றன?
ஒவ்வொரு வருடமும் பல்வேறு புதிய ஐபோன்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். எனவே, எந்தெந்த ஐபோன்கள் ஆப்பிளின் புதிய IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
ஐபோன் Xr, Xs, Xs மேக்ஸ், 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மேக்ஸ், 12 மினி, 12, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ், 13 மினி, 13, 13 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ், 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ், இறண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை SE ஆகிய மாடல்கள் புதிய இயங்குதள அப்டேட்டைப் பெறுகின்றன.
இந்தாண்டு ஐபோன் X மற்றும் ஐபோன் 8 சீரிஸூக்கான இயங்குதள அப்டேட்டை நிறுத்தியிருக்கிறது ஆப்பிள்.