NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?
    ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?
    தொழில்நுட்பம்

    ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 19, 2023 | 11:10 am 0 நிமிட வாசிப்பு
    ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?
    ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?

    கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ரூ.80,000 விலையில் தொடங்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை, அதிபட்சமாக 15 ப்ரோ மேக்ஸூக்கு ரூ.1.6 லட்சம் வரையிலான விலை வரை இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் புதிய ஐபோனை வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதற்கான காப்பீடு போன்ற வசதியான ஆப்பிள்கேர்+ சேவைத் திட்டத்தையும் வாங்க மறந்து விடாதீர்கள். பைக் அல்லது கார்களுக்கு காப்பீட்டுத் திட்டம் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், போன்களுக்கு அப்படி இல்லை. மற்ற போன்களுக்கு பரவாயில்லை, ஆனால் ஐபோன்களை தவறுதலாக உடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? எனவே ஆப்பிள்கேர்+ சேவைத் திட்டத்தை வாங்க மறக்காதீர்கள்.

    என்னென்ன வசதிகளை ஆப்பிள்கேர்+ல் அளிக்கிறது ஆப்பிள்? 

    சாதாரணமாக ஐபோன்களுக்கு 1 வருட வாரண்டி அளிக்கிறது ஆப்பிள். ஆப்பிள்கேர்+ உடன் இரண்டு ஐபோன்களுக்கு இரண்டு வருடம் கூடுதல் வாரண்டி அளிக்கிறது ஆப்பிள். இவை தவிர, ஆக்ஸிடெண்டல் டேமேஜ் கவரையும் ஆப்பிள்கேர்+ல் ஐபோன்களுக்கு அளிக்கிறது ஆப்பிள். இதன் மூலம், ஐபோனை நாம் தவறுதலாகக் கீழே போட்டு, அதில் உள்ள பாகங்கள் உடைந்துவிட்டாலும், சர்வீஸ் சார்ஜை மட்டும் செலுத்தி நாம் புதிய பாகத்தை மாற்றிக் கொள்ள முடியும். சாதாரணமாக ஆப்பிளின் பின்பக்க கண்ணாடி அமைப்பு உடைந்தால், ரூ.38,000 செலவு செய்ய வேண்டியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆப்பிள்கேர்+ திட்டத்துடன் இதற்கு ரூ.2,500 சர்வீஸ் சார்ஜ் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதிகபட்சமாக ரூ.20,900 விலையில், 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான ஆப்பிள்கேர்+ வசதியை வழங்குகிறது ஆப்பிள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஐபோன்

    சமீபத்திய

    மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு மத்திய அரசு
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  காவிரி
    ஒருநாள் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் ஜெகன் மோகன் ரெட்டி

    ஆப்பிள்

    இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட் ஆப்பிள் தயாரிப்புகள்
    இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி? ஐபோன்
    IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள் ஐபோன்
    ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் ஆப்பிள் தயாரிப்புகள்

    ஐபோன்

    ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்  ஆப்பிள்
    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஆப்பிள்
    செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள் ஆப்பிள்
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'  ஆப்பிள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023