
புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் சூடாகும் பிரச்சினைக்கு முடிவு கட்டிய ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம் ஆப்பிள் அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் சூடாவதாக பயனாளர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகாரெழுப்பி வந்தனர்.
இந்தப் பிரச்சினையை மென்பொருள் அப்டேட் மூலமாக ஆப்பிள் சரி செய்யவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த அப்டேட்டை பயனாளர்களுக்கு வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த ஐபோன் 15 சீரிஸ் போனுடன், ஆப்பிள் அறிமுகப்படுத்திய ஐஓஎஸ் 17 இயங்குதளத்தின் புதிய அப்டேட்டாக வெளியாகியிருக்கிறது ஐஓஎஸ் 17.0.3 அப்டேட். இந்த அப்டேட்டில் ஐபோன்கள் சூடாகும் பிரச்சினை சரி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
ஐபோன்களின் செட்டிங்ஸில், ஜெனரல் பிரிவுக்குச் சென்று, 400 MB அளவில் அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய சாப்ட்வேர் அப்டேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆப்பிள்
எதனால் புதிய ஐபோன்கள் சூடானது?
ஆப்பிளின் புதிய இயங்குதளத்திலிருந்த libvpx என்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த கோளாறு மற்றும் கெர்னல் கோளாறு காரணமாக அதிகம் சூடாகியிருக்க வாய்ப்புகள் இருந்ததாகவும், அதனைப் புதிய இயங்கதள சாப்ட்வேர் அப்டேட்டில் சரி செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
இதுதவிர, ஊபர், இன்ஸ்டாகிராம், அசால்ட் 9 உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகளின் கோடுகளில் இந்த பிரச்சினையும் புதிய மொபைல் சூடானதற்கான காரணங்களாக இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
மேலும் ஹார்டுவேர் வகையில் டைப் சி சார்ஜிங்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை ஆப்பிள் ஒத்துக் கொண்டிருந்தாலும், அது முதன்மையான காரணமாக இருக்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம்.