RCS-யை வழங்கும் ஆப்பிளின் திட்டம் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
செய்தி முன்னோட்டம்
RCS குறுஞ்செய்தி வசதியை அடுத்த ஆண்டு முதல் ஐபோனிலும் அளிக்க ஆப்பிள் திட்டமிட்டு வருதவாகத் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. தொழில்நுட்ப உலகில் இது பெரிய மாற்றமாகவும் பேசப்பட்டு வந்தது. இதனால் நமக்கு (இந்தியாவில்) என்ன பலன்?
வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி சேவைகளுக்கு போட்டியாக அடிப்படையான செயலியாக மொபைலில் கொடுக்கப்படும் வண்ணம் உருவாக்கப்பட்டதே RCS குறுஞ்செய்தி சேவையாகும்.
இந்தியாவில் பெரும்பாலும் தகவல் பகிர்வு முதல் புகைப்பட மற்றும் காணொளிப் பகிர்வு வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப்பே பிரதான குறுஞ்செய்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாட்ஸ்அப்பில் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் தகவல் பாதுகாப்பு வசதி இருப்பதனால், வாட்ஸ்அப் மூலம் நாம் அனுப்பும் தகவல்களை இடையில் யாரும் திருடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆப்பிள்
அமெரிக்காவின் பிரதான குறுஞ்செய்தித் தளம்:
உலகின் பிற நாடுகளைப் போல அமெரிக்காவில் ஆண்ட்ராய்டை விட ஆப்பிளின் ஐஓஎஸ் பயனாளர்களே அதிகம். அமெரிக்காவின் மொத்த ஸ்மார்ட்போன் பயனாளர்களில் 58% ஐஓஎஸ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் ஐபோன் பயனாளர்கள் தான், ஆண்ட்ராய்டு 41.66% பயனாளர்களை அங்கு கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு மொபைல்களில் எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றாக, வாட்ஸ்அப்பைப் போல பாதுகாப்பான சேவையாக RCS குறுஞ்செய்தி சேவை கொண்டு வரப்பட்டது.
ஆப்பிளோ, எஸ்எம்எஸ்க்கு மாற்றாக பாதுகாப்பான ஐமெஸேஜ் (iMessage) என்ற சேவையை தொடக்கம் முதலே வழங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆப்பிள் பயனாளர்களுக்குள்ளே பிரதான குறுஞ்செய்தி மற்றும் தகவல் தொடர்புத் தளமாக ஐமெஸேஜே இருந்து வருகிறது.
இந்தியா
ஐமெஸேஜ் vs RCS:
ஆனால், ஆப்பிளின் இந்த ஐமெஸேஜில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு குறுஞ்செய்திகளைப் பகிரும்போது, அது பாதுகாப்பில்லாத எம்எம்எஸ் வழியாகவே பகிரப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே பல்வேறு தளங்களுடன் ஒத்துப் போகும் வகையில் ஆப்பிள் தங்களுடைய கதவுகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது ஐரோப்பிய ஒன்றியம்.
ஐமெஸேஜை ஐஓஎஸ் பயனாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக வைத்திருக்கிறது ஆப்பிள். ஆண்ட்ராய்டின் RCS சேவையை ஐபோனில் அனுமதிப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட முடியும், ஐமெஸேஜையும் பிரத்தியேகமாக வைத்துக் கொள்ளமுடியும் என்பது ஆப்பிளின் திட்டம்.
இந்தியாவில் 2022ம் ஆண்டு தரவுப்படி 97% ஆண்ட்ராய்டு பயன்பாடு தான், மேலும் தகவல் பறிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் தான். எனவே, RCS சேவையை வழங்கவிருக்கும் ஆப்பிளின் முடிவு இந்தியப் பயன்பாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.