iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
ஆப்பிளின் சமீபத்திய iOS 17.4 புதுப்பிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து சைட்லோடிங் ஆப்ஸ் மற்றும் திருட்டிற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், சில ஐபோன் பயனர்கள், இந்த புதிய ஃபார்ம்வேரை நிறுவிய பிறகு, குறிப்பிடத்தக்க வகையில் பேட்டரி சார்ஜ் குறைவதாக புகாரளித்துள்ளனர். ஒரு பயனர் தனது பேட்டரி இரண்டு மணி நேரத்தில் 40% இழந்ததாகக் கூறினார். மற்றொருவர் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் ஒரே இரவில் 60% முதல் 0% வரை குறைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். பேட்டரி சார்ஜ் நிற்கும் நேரம் குறைபாடு தவிர, சில பயனர்கள் iOS 17.4 க்கு புதுப்பித்த பிறகு சார்ஜிங் சிக்கல்களையும் சந்தித்துள்ளனர்.
பேட்டரி குறைபாடுகளை நீக்க சில தீர்வுகள்
பேட்டரி ட்ரைன் ஆவதை தடுக்க, பயனர்கள் தங்கள் ஐபோனை ரீசெட் செய்து முயற்சி செய்யலாம். ஆப் ஸ்டோர் மூலம் அனைத்து பயன்பாடுகளையும் புதுப்பித்தல் மற்றும் செட்டிங்ஸ்-> பேட்டரியைச் சரிபார்த்து, பேட்டரி சார்ஜை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் ஆப்களை அடையாளம் காண முடியும். தேவையற்ற ஆப்களை நீக்கலாம். திரையின் பிரைட்னஸ் குறைப்பது அல்லது செட்டிங்ஸ்-> டிஸ்பிலே & பிரைட்னஸ் பகுதிக்கு சென்று, ஆல்வேஸ் ஆன் என்ற ஆப்ஷனை நீக்கினால், பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க உதவும். இந்த தீர்வுகளை முயற்சித்த பிறகும், பேட்டரி ட்ரைன் ஆவது நீடித்தால், பின்னணி செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், பேட்டரி ஆயுளை மேம்படுத்தவும், பயனர்கள் செட்டிங்ஸ்-> பேட்டரியில் குறைந்த பவர் பயன்முறையை இயக்கலாம்.