
ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள்
செய்தி முன்னோட்டம்
கடந்த செப்டம்பர் 12ல், புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகளுள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள்.
இந்த நிகழ்வில், ஐபோன் 15 சீரிஸின் கீழ் நான்கு புதிய ஐபோன்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது அந்நிறுவனம்.
ஐபோன் 15, ஐபோன் 15 ப்ளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஐபோன் மாடல்களையும், வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களையும் அந்த நிகழ்வில் வெளியிட்டது ஆப்பிள்.
இந்தப் புதிய ஐபோன்களை செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆப்பிள் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதன் முன்பதிவும் தொடங்கியது.
ஆப்பிள்
விரைவில் விற்றுத் தீர்ந்த ஐபோன்கள்:
இந்தியாவில் செப்டம்பர் 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு புதிய ஐபோன்களுக்கான முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே பெரும்பாலான ஐபோன் மாடல்கள் விற்றுத் தீர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஐபோன்களை முன்பதிவு செயதவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி ஷிப்பிங் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
புதிய ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்களில் முந்தைய A16 பயானிக் சிப்பையும், 15 ப்ரோ மாடல்களில் புதிய A17 சிப்பையும் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இவை, தவிர பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகளுடன் புதிய வசதிகள் பலவற்றை உள்ளடக்கி வெளியிடப்பட்டிருக்கிறது புதிய ஐபோன் சீரிஸ்.